நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் இவரின் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், வில்லன் கதாபாத்திரத்தில் காலடி எடுத்து வைத்தார்.

arun-vijay

இப்பொழுது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட அதிக படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் , இவர் வில்லன் கதாபாத்திரத்தில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலை இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம்  இந்த திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது,இந்த நிலையில் தற்பொழுது நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டரில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பலர் இவரை பாராட்டி வருகிறார்கள்.