Tamil Cinema News | சினிமா செய்திகள்
நரம்பு புடைத்து வெறித்தனமான அருண்விஜய் புகைப்படம்.. விக்ரம்,சூர்யாவை மிஞ்சும் மாஃபியா.. குவியும் லைக்ஸ்
நீண்ட நாட்களாக வெற்றிக்கு காத்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி செய்தால் விஸ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நடிகர் அருண் விஜய்.
நீண்ட நாட்களாக சினிமாவில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ள கிட்டத்தட்ட அவருக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆகி உள்ளது. என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அவரது சினிமா கிராப் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முயற்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கி வருகிறார். அருண் விஜய் செல்லமாக ருத்ரா என்ற நாய் ஒன்றை நீண்டகாலமாக வளர்த்து வருகிறார்.
பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கும் இந்த நாயை அருண்விஜய் கொஞ்சி கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரம்பு புடைத்தபடி ‘எங்கே நீ ஒழிந்தாலும் எதிரில் நிற்பவன்‘ என்ற பதிவுக்கு லைக்ஸ் மட்டும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இது தனது அடுத்த பாடமான மாபியா படத்தில் வரும் வசனம் போல் இருக்கிறது.

arun-vijay
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
