Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹரி படத்துக்காக கொம்பன் கெட்டப்புக்கு மாறிய அருண் விஜய்.. மரண மாஸ்!
நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு தற்போது தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் அருண் விஜய். அதேபோல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிவிட்டார்.
கடைசியாக அருண் விஜய் இயக்கத்தில் வெளியான மாபியா படத்திற்கு தமிழகமெங்கும் மிகப்பெரிய ஓபனிங் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக மிஷ்கின் படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது வந்த தகவலின் படி சூர்யா ஹரி கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் சற்று தள்ளி செல்வதால் அதற்குள் அருண் விஜய்யுடன் ஒரு படம் உருவாக்கி விடலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஹரி.
இதற்கு முன்னர் மலை மலை போன்ற கிராமத்து படங்களில் அருண்விஜய் நடித்து இருந்தாலும் அப்போது அவருக்கு பெரிதாக ரசிகர் பட்டாளம் இல்லாததால் அந்த படங்கள் சரியாக மக்களிடம் சென்றடைய வில்லை.
ஆனால் தற்போது ஸ்டைலிஷ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு பக்கா கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றை உருவாக்கி பி & சி சென்டர்களில் குடும்ப ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம் ஹரி.
அந்த படத்துக்காக தற்போது அருண் விஜய் முரட்டு மீசை வளர்த்து வருகின்றாராம். சமீபத்தில் அவர் குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படத்தில் அந்த மீசையுடன் இருந்தார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

arun-vijay-cinemapettai
