சிவகார்த்திகேயனை தரக்குறைவாக பேசிய அருண் விஜய்.. பூகம்பமாய் வெடித்த சர்ச்சை

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா பின்புலத்தோடு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அருண் விஜய். இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர் பட்டியலில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.

என்னதான் அவர் படங்களில் உடலை வருத்தி கஷ்டப்பட்டு நடித்தாலும் பாராட்டுக்கள் கிடைக்கிறதே தவிர படம் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. ஆனாலும் அவர் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார்.

மேலும் இவருக்கு பின்னால் வந்த நடிகர்கள் எல்லாம் தற்போது முன்னணியில் இருக்கும் போது தனக்கு அந்த இடம் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருக்கிறது. அவருடைய அந்த வருத்தம் சிவகார்த்திகேயன் விஷயத்தில் பொறாமையாக மாறி உள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீமராஜா. அந்தத் திரைப்படம் வெளியான சமயத்தில் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் யாரெல்லாம் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது என்று ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அவருடைய இந்த கருத்து அப்போது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. அதுமட்டுமின்றி மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்த போது கூட அவர் ஒரு சிரித்துக் கொண்டிருக்கும் ஸ்மலியையும் போட்டு இருந்தார். அவருடைய இந்த தொடர் பதிவுகள் பல விமர்சனங்களை பெற்றது.

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையால் சிறிது சிறிதாக முன்னேறி சினிமாவில் இன்று தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பல திறமைகள் கொண்டு கலக்கி வருகிறார். இதனால் அருண் விஜய் சிவகார்த்திகேயன் மீது கடும் பொறாமையில் இருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இதனால்தான் அவர் படம் தோல்வி அடைந்ததும் அருண் விஜய் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் என்று இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் இது பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் எந்த விளக்கமும் தரவில்லை.

சமீபத்தில் கூட திருமணவிழாவில் சிவகார்த்தியன் வருவதாக அருண் விஜய்யை பவுன்சர்கள் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இன்னமும் இவர்களிடையே ஒரு பனிப் போர் நடைபெற்று தான் வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்