fbpx
Connect with us

Cinemapettai

இந்தியில் தடம் பதிக்கும் அருண் விஜய்.. மாஸ் காட்டுகிறார் மனுசன்

arun-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்தியில் தடம் பதிக்கும் அருண் விஜய்.. மாஸ் காட்டுகிறார் மனுசன்

கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிட்டும் என்ற பழமொழியை சாத்தியமாக்கி காட்டியவர் நடிகர் அருண் விஜய். ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் தல அஜித் உடன் நடித்த என்னை அறிந்தால் படம் அருண் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. விக்டர் என்ற கேரக்டர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அதனைத் தொடர்ந்து ஹீரோ வில்லன் என மாறி மாறி அனைத்து கதாபாத்திரங்களிலும் தடம் பதித்து வந்தார். பெரிய பட்ஜெட் படங்களில் வில்லனாகவும் சிறப்பான கதைகளில் ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து தற்போது முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படங்கள் அனைத்துமே பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மகிழ்திருமேனி இயக்கியிருந்த இந்தப் படம் அருண்விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம்.

தற்போது அருண் விஜய்யின் தடம் படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. தடம் படத்தின் ரீமேக்கில் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா என்பவர் நடிக்க உள்ளார். ஏற்கனவே தடம் தெலுங்கில் ரெட் என்ற பெயரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அருண்விஜய் சினம், மாபியா chapter-2, அறிவழகன் படம் என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top