Connect with us
Cinemapettai

Cinemapettai

arunvijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளம் நடிகையை சுவரோடு சுவராக இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்யும் அருண் விஜய்.. வைரல் போஸ்டர்

அருண் விஜய் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் வந்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறிக்கொண்டிருக்கிறது. வில்லனாக ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டுள்ளார்.

வாரிசு நடிகராக இருந்தாலும் இவருக்கு சும்மா ஒன்றும் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இவரும் பல்வேறு அவமானங்களை சந்தித்துதான் தனக்கென ஒரு பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்.

அந்த பாதையை எக்காரணத்தைக் கொண்டும் நழுவ விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். தற்போது அருண் விஜய் எப்படி படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அறிவழகன் வெற்றிக் கூட்டணியில் பார்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஹோட்டலயே ஸ்கிரீன் ஆக வைத்து வெட்டவெளியில் அந்த ஹோட்டல் முன்பக்க அமைப்பையே ஒரு தியேட்டர் போல் மாற்றி அதில் போஸ்டரை வெளியிட்டனர். இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

பார்டர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் படேல் என்ற நடிகையுடன் ரொமான்ஸில் கலக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

arunvijay-borrder-movie-photo

arunvijay-borrder-movie-photo

Continue Reading
To Top