Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண் விஜய்க்கு போட்டியாக உடம்பை ஏற்றும் கௌதம் கார்த்திக்.. வெளிவந்த வெறி கொண்ட புகைப்படம்
தமிழ் சினிமாவிற்கு வரும் வாரிசு நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். பலர் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் விஜயகுமார் அவர்களின் வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடியவர் தான், அருண் விஜய்.
ஆரம்பத்தில் கவனிக்கப்படாத நடிகராக இருந்தாலும், சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

arun-vijay-boxer
அதிலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தினர் அருண் விஜய்யை பற்றிக் கொண்டனர். நடுவில் ஹீரோவாக நடித்த குற்றம் 23, தடையறத் தாக்க, தடம் போன்ற படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, தற்போது மாபியா சேப்டர் ஒன் வெளிவந்து ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெற்றது.
படம் ஓடவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரத்தில் தடம் பதித்து இருப்பார் என்றே கூறலாம். மற்றொரு வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே வெற்றி கண்டவர் என்றே கூறலாம்.
இதற்குப் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் ஓடவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளசுகள் மனதில் இடம் பிடித்தது. இவர் தற்போது அடுத்த படத்திற்காக உடம்பை மெருகேற்றி வருகிறார்.
தனது டிவிட்டர் பதிவில் ‘ஒவ்வொரு மேகத்திற்குள்ளும் ஒரு சிறந்த புதையல் உள்ளது’ என கடின உழைப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

gautham-karthik
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
