Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண் விஜய்யின் பாக்ஸர் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை.!

அருண் விஜய் சமீபகாலமாக நல்ல கதைகள் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அதனால் வெற்றியும் அடைந்து வருகிறார், இவர் நடித்த செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சஸ்பென்ஸ் படமான தடம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார், மேலும் திரைப்படம் நீண்ட நாட்களாக ஓடி வெற்றி பெற்றதுடன் வசூலிலும் கல்லா கட்டியது.
மேலும் அருண் விஜய் சகோ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலை இவர் இயக்குனர் விவேக் இயக்கத்தில் பாக்சிங் மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு பாக்ஸர் என பெயர் வைத்துள்ளார்கள்.
#Boxer #பாக்ஸர் @arunvijayno1 @MathiyalaganV9@Vivek_Director @immancomposer @ritika_offl @EtceteraEntert1 @MALjungberg @ganesh_madan @hinasafaa234 @SureshChandraa@DoneChannel1 @ProRekha pic.twitter.com/q2TMiiHm9F
— Etcetera Entertainment (@EtceteraEntert1) May 15, 2019
படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங் கமிட்டாகியுள்ளார், இவர் இறுதிச் சுற்றுப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
