புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

பீமா விக்ரம் ரேஞ்சுக்கு தாறுமாறாக உடலை ஏற்றிய அருண் விஜய்.. பேசாம பீமா 2 எடுக்கலாம் போல!

என்னை அறிந்தால் படத்தில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு அருண் விஜய்(Arun Vijay) ஹீரோவாகவும் பல படங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். வில்லனாக ரீஎன்ட்ரி ஆகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் வா டீல்.

இந்த படம் நேரடி ஓடிடி ரிலீஸ் என அறிவிப்புகள் வந்துள்ளன. இருந்தாலும் இன்னமும் படக்குழுவினர் எப்போது ரிலீஸ் என்பதை முடிவு செய்யாமல் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க அடுத்து அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள பார்டர் படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சினம் என்ற படமும் வெளியீட்டுக்கு ரெடி.

இப்படி அருண்விஜய் நடிப்பில் சில படங்கள் ரிலீசாகாமல் தடுமாறிக் கொண்டிருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க பிசியாகி வருகிறார். அந்த வகையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.

எப்போதுமே உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டும் அருண் விஜய் தற்போது பீமா விக்ரம் ரேஞ்சுக்கு தாறுமாறாக உடலை ஏற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம ஹிட் அடித்துள்ளது.

arunvijay-cinemapettai
arunvijay-cinemapettai

Trending News