Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீமராஜா சிவகார்த்திகேயனை மட்டம் தட்டிய ட்வீட் ! பதிவிட்டது அருண் விஜயா அல்லது ஹாக்கரா ? நீங்களே கண்டுபிடிங்க !

ட்விட்டர் மற்றும் சர்ச்சை எப்பொழுதும் கூட பிறந்த ஒன்று தான். வெளிநாடு தொடங்கி நம் உள்ளூர் வரை பல சமாச்சாரங்கள், சில்மிஷங்கள் என பல வெளிவர காரணமாக உள்ளது இந்த ப்ளூ குருவி .

சீமராஜா

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. படையப்பா நீலாம்பரி பாதிப்பில் சிம்ரன் கதாபாத்திரம் தொடங்கி சாரட் வண்டியில் வரும் ரஜனி ஸ்டைல், கபடி ஆடும் கிள்ளி விஜய், மெர்சல் குதிரை என்ட்ரி அவ்வளவு ஏன் பாகுபலி வரை பல ரெபெரென்ஸ் இந்த ட்ரைலர் இருந்தது. வெளியான சில நிமிடங்களில் அக்குவேறு ஆணிவேராக பிரித்தெடுத்தனர் நெட்டிசன்கள். யார் என்ன சொன்னாலும் பல மில்லியன் லைக்குகளை அள்ளிக்குவித்துள்ளது இந்த ட்ரைலர்.

அருண் விஜய்

இந்நிலையில் இரவு அருண் விஜய் ட்விட்டரில் பக்கத்தில் இந்த ட்வீட் பதிவிடப்பட்டது. “யாரெல்லாம் மாஸ் பண்றதுனு ஒரு வெவஸ்த இல்லாம போச்சி, தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். உண்மையான திறமைகளை ஆதரியுங்கள்.” என்பதே அது.

twwet

சில நிமிடங்கள் இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் ஏன் ப்ரோ நீங்க சிவாவை இப்படி மட்டம் தட்டுறீங்க என்று கேட்க ஆரம்பித்தனர். வேறு சிலரோ பொறாமை படாதீங்க என்றெல்லாம் கமெண்ட் தட்ட ஆரம்பித்தனர்.

twwet

இந்நிலையில் விடியற்காலையில் என் கணக்கை யாரோ ஹாக் செய்துவிட்டனர். சில டீவீட்டுக்களை கண்டுகொள்ளாதீர்கள். என் கணக்கை மீட்டுவிட்ட்டேன் என்று பதிவிட்டார்.

மேலும் சிறுது நேரம் கழித்து , என்னை புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு நன்றி. அந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று பதிவிட்டார்.

பின்னர் “நான் பல வருடங்களாக சினிமா துறையில் உள்ளேன். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் அவசியம் எனக்கு தெரியும். பெரியவர் , சிறியவர் என்று யாரும் கிடையாது. நான் என்றும் திறமையை மதிப்பவன். நான் என்று சக நடிகரை மட்டம் தட்ட மாட்டேன். ஒன்றாக இருக்கும் எண்கள் சகோதர உறவில் பிரிவை விதைக்காதீர்கள்.” என்று மீடியாவுக்கு சொல்லவது போன்ற அடுத்த டீவீட்டை பதிவிட்டார்.

சினிமாபேட்டை கிசு கிசு

அட்மின் அல்லது ஹேக்கர் தான் இது மாதிரி வேலைகளை செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து இது தெரியாமல் போச்சே .. ச்ச…..

நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை பஸ்டாண்டில் உள்ள தெரு நாயுக்கு தான் கிடைக்கும்னு இருந்தா

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top