Tamil Cinema News | சினிமா செய்திகள்
அருண்விஜய்யை தப்பு சொல்லிய சினி உலகம்.. சிவகார்த்திகேயன் செய்தது மட்டும் சரியா?
சமீபகாலமாக தமிழ் சினிமா உலகில் அதிகம் பேசப்பட்டு வருவது சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரின் பிரச்சனைதான். இதை ஆரம்பித்து வைத்தது என்னமோ அருண் விஜய்யின் ட்விட்டர் அக்கவுண்ட் தான். சீமராஜா படத்தின் டிரைலர் வெளியான போது யாரெல்லாம் மாஸ் பண்றது என்ற விவஸ்தையே இல்லாம போச்சு என நேரடியாக தாக்கி ட்வீட் போட்டு இருந்தார்.
பிறகு அந்த டிவீட்டை அருண்விஜய்யின் அட்மின் போட்டு விட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் கூறியதைப் போல் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் மண்ணை கவ்வியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் ஒரு தனியார் விருது விழாவுக்கு அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் வந்திருந்தனர்.
அப்போது சிவகார்த்திகேயன் வரும்போது அருண் விஜய் தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி அவர்மீதான கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தியது. சரி. அருண் விஜய் செய்தது தவறுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாகவே அருண்விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, டிவியிலிருந்து சிவகார்த்திகேயன் சினிமாவில் மிகப் பெரிய இடத்திற்கு வந்ததால் பொறாமை என்பது தானே.

sivakarthikeyan-arunvijay-fight
ஆனால் சிவகார்த்திகேயன் டிவியில் பணியாற்றும்போது எப்படி நடந்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்ததுதான். தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் மிமிக்கிரி என்ற பெயரில் மிகப் பெரிய நடிகர்களை தாக்கிப் பேசியுள்ளார். தளபதி விஜய் ஒருகட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போது நேரடியாக அவரை தாக்குமாறு தனது மிமிக்கிரியில் விஜய்யை, முதல்ல நல்ல கதையை தேர்ந்தெடுக்கவும் என கிண்டல் செய்திருந்தார்.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் சினிமாவில் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யை அன்று கதை சரியில்லை என்று கிண்டல் செய்த சிவகார்த்திகேயன், சமீபகாலமாக மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் மிக மட்டமான திரைக்கதையில் நடித்து தோல்வியை சந்தித்தார்.
சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மட்டுமே சுமாராக ஓடியது. விஜய் ஒரு காலத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததை தான் தற்போது சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் நடைபெற்று வருகிறது. அருண் விஜய்யின் மீது குற்றம் சொன்னால் சிவகார்த்திகேயன் செய்ததும் தவறு தானே.
ஆக சினிமாவுக்கு வரும் வரை, யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தான் சினிமாவுக்கு வந்த பிறகு தன்னை யாரும் பேசி விடக்கூடாது, அப்படியே பேசி விட்டாலும் ரோச பட்டு மேடையில் அடுத்தவர்களை தாக்கிப் பேசுவது, என்னமோ தான் தான் உழைத்து முன்னேறிய மாதிரி சீன் போடுவது என நடந்துகொள்வது சரியா? ஆனால் அருண் விஜய் இதுவரை எந்த நடிகரையும் தாக்கி பேசியதாக தெரியவில்லை. உழைப்பால் முன்னேறியவருக்கு என்றுமே ரோசம் இருப்பது நல்லது தான்.
சிவகார்த்திகேயன் மற்றும் அருண்விஜய் ஆகிய இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டை வைத்துள்ளனர். இருவரும் நல்ல திறமைசாலிகள் தான். தயவுசெய்து சிவகார்த்திகேயன் இனி தொலைக்காட்சிகளில் செய்ததையெல்லாம் யோசித்து மேடைகளில் பேசுவது நல்லது.
அடுத்ததாக வெளிவரவிருக்கும் இருவரின் படங்களும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
