Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிஷ்கினுடன் இணையும் அருண் விஜய்.. விஷாலுக்கு ஆப்பு வைக்க அடுத்தடுத்து அதிரடி
சமீபத்தில் விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மிஸ்கின் அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். மேலும் அந்த படத்தை விஷால் சொந்தமாக இயக்குவதாக முடிவு செய்துவிட்டார் என செய்திகள் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் மிஷ்கினுக்கு இனி யாரும் படவாய்ப்புகள் தரக் கூடாது என்பதை போல ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஆனால் மிஸ்கின் அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்கப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக சிம்பு மற்றும் மிஷ்கின் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் கிடைத்தது. இந்த படம் ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது அதே போல் வேறு ஒரு திரில்லர் படத்தை அருண் விஜய்யை வைத்து இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. குறைந்த செலவில் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர் மிஷ்கின்.
இதனால் அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகள் கிடைத்து மிகவும் குஷியாக உள்ளாராம் மிஷ்கின். அதுமட்டுமில்லாமல் கத்துகிட்ட மொத்த வித்தையும் இந்த இரண்டு படங்களில் காட்டி முன்னணி இயக்குனராக மாறிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகிறாராம். விஷால் நடிக்கும் துப்பறிவாளன் ரிலீஸ் நேரத்தில் வெளியிட்டு போட்டி வேற நடக்க போகுதாம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
