Connect with us
Cinemapettai

Cinemapettai

hari-vetrimaran-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய்க்காக ஆடுகளம் பட நடிகரை அலேக்காக தூக்கிய ஹரி.. வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர்

விஜய்யை வைத்து ஹரி தற்காலிகமாக AV 33 என்று பெயர் சூட்டிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ஆடுகளத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயபாலன் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

jayabalan cinemapettai

jayabalan cinemapettai

ஹரி இயக்கும் படத்தில் ஜெயபாலன் ஒப்பந்தமாகி உள்ளதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இவரது கதாபாத்திரம் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஆடுகளம் படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. இப்படத்திலும் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஹரி செதுக்கி வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் நடிப்பவர்களின் தகவலை அடுக்கடுக்காக படக்குழு வெளியிட்டு வருகிறது.மேலும் இப்படம் அருண் விஜய்க்கு 33 வதுபடம் என்பதால் ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top