Connect with us

Cinemapettai

இழந்த மனைவி, கொரோனாவின் கோரப்பிடி பற்றி அருண் ராஜா காமராஜின் உருக்கமான முதல் பதிவு!

arunraja-kamaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இழந்த மனைவி, கொரோனாவின் கோரப்பிடி பற்றி அருண் ராஜா காமராஜின் உருக்கமான முதல் பதிவு!

கொரோனா என்ற இந்த நோய் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. உலகளவில் பெரிய பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. நாம் இந்தியாவும், தமிழகமும் மட்டும் இதில் இருந்து விதிவிலக்கா வாங்க முடியும். இங்கும் பெரும் சோகங்கள் நிகழ்ந்து தான் வருகிறது.

அருண்ராஜா காமராஜ்  இயக்குனராவதற்கு முன்பே பாடலாசிரியராகவும் பாடகராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில்  ராஜாவுக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும்  கொரானா தொற்று ஏற்பட்டது. 38 வயதான சிந்துஜா உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். கட்டிய மனைவியை தொட்டுக் கூட பார்க்க முடியாத நிலையில் PPE கிட் அணிந்து வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது இன்றும் அப்படியே நம் கண் முன்னே நிற்கிறது.

இந்நிலையில் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறிப்பட்டதைக் கண்ட நொடி முதல், நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது.

arunraj-kamaraja-wife-funeral

arunraj-kamaraja-wife-funeral

எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள், பிரார்த்தனைகள், அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி, இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னை விட்டுப் பிரித்துவிட்டு சென்றது.

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு, வன்மம், காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம்.

இங்கே அசட்டு தைரியங்களும், அர்த்தமற்ற பயங்களுமே உயிர்வேட்டை ஆடிக்கொண்டு இருக்கிறது. என்னை தேற்றிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னையும் என் துணைவியாரையும் மீட்டு எடுக்கப் போராடிய அத்துனை முன்கள போர்வீரர்களும் என் வாழ்நாள் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நன்றிகள்.

எனை சுற்றி ஒருவர் கூட நச்சின் கோரத்தில் நசுக்கப்படவில்லை என்பதே இழந்த ஒவ்வோர் இழப்புகளின் ஆன்மா சாந்தியடைவதற்கான வழி. மீண்டும் பல கோடி வாழ்நாள் நன்றிகள்.” இவ்வாறு அருண்ராஜா காமராஜ் பதிவிட்டுள்ளார்.

முழுவதும் படிக்க அவரின் முகநூல் பக்கத்தின் லிங்க் க்ளிக் செய்க

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top