காமெடி வேடங்களில் தலைகாட்டி கபாலி படத்தின் நெருப்புடா பாடல் மூலம் பாடகராக புகழ் பெற்றவர் அருண்ராஜா காமராஜ் என்னும் நெருப்பு குமார். இவர் நடிப்பு, பாடலாசிரியர், பாடகர் என்று பன்முக திறமை கொண்டவர்.

தற்போது இவர் எடுக்க போகும் புது அவதாரம் இயக்குனர். அதுவும் இவர் தேர்வு செய்திருக்கும் களம் பெண்கள் கிரிகெட்.

இதுபற்றி அவர் கூறியபோது

“நான் சினிமாவில் அடியெடுத்து வைத்ததே இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான். நாளைய இயக்குனரில் குறும்படம் எடுத்துள்ளேன், வேட்டை மன்னன் படத்திற்கு உதவி இயக்குனராய் பணிபுரிந்துள்ளேன். அதன் பின் பல படங்களில் எனது பாதை மாறி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ஆசை, கனவு எல்லாம் இயக்கம்தான். அதற்கு தற்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இயக்குனராய் அறிமுகமாகும் களம் புதிதாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை கருவாக கொண்டு படம் இயக்க உள்ளேன். இந்த படத்திற்கான கதையை பெண்கள் உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதற்கு முன்பே நான் எழுதிவிட்டேன்.

arunraja-kamarajவிளையாட்டு மையமாக இருப்பினும் இந்த படத்தில் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான அன்பு பிரதானமாக இருக்கும். ஒரு விளையாட்டு வீரருக்கு ஊக்கமளிப்பதே அவரது குடும்ப ஆதரவுதான். அதை மையமாக கொண்டு சில உண்மை வீரர்களின் வாழ்க்கை சம்பவங்களை கோர்த்து இந்த கதையை உருவாக்கியுள்ளேன்.

எனது இந்த முயற்சிக்கு தமிழ் மக்களின் வரவேற்பு எப்படி உள்ளதோ அதை பொறுத்தே எனது நாளைய படங்களும் அமையும். இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. விளையாட்டில் ஆர்வமுள்ள பெண்களையே முன்னுரிமை அளித்து தேர்வு செய்துவருகிறேன்” இவ்வாறு கூறினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஒரே ஒரு கேள்வி உங்கள்ட, வைக்கிங் பட்டைய கிளப்புதுடானு அடித்தொண்டைல தொடர்ந்து பாடிட்டு இருக்கிங்களே எப்போதான் இந்த டிரண்டைவிட்டு மாறப்போறீங்க?