Connect with us

Cinemapettai

arun-jaitley-passed-away

India | இந்தியா

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.! அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள்

முன்னாள் நிதி அமைச்சரான அருண் ஜெட்லி 1977 சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் பணியாற்றியுள்ளார்

1990இல் டெல்லி  உயர்நீதிமன்ற மூத்த வக்கீலாக அறிவிக்கப்பட்டார் ஆனால் அதற்கு முன்பே 1970 இல் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு இணைந்துள்ளார் ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார் 1982 சங்கீதா என்பவரை திருமணம் செய்துள்ளார் இவர்களுக்கு என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளனர். இவர் கிரிக்கெட் ஆர்வம் மிகுந்தவர் என்பதால் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார்.

சில நாட்களாக உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி முதல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று  மதியம் 12 மணியளவில் காலமானார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதையடுத்து பா.ஜ.க தலைவர்கள் அமைச்சர்கள் மருத்துவமனையை விரைந்துள்ளனர்.

press-release-arun-jetlay

press-release-arun-jetlay

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top