Tamil Cinema News | சினிமா செய்திகள்
இமையமலையில் இன்னொரு சிங்கம்.! அஜித்தின் ஆட்டோகிராஃப் வெளியிட்டு தாறுமாறாக புகழும் பிரபலம்.!
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் விஸ்வாசம் இந்த படத்தின் பாடல்களை பாடலாசிரியர் அருண் பாரதி எழுதியுள்ளார்.

ajith viswasam
இவர் இதற்கு முன் அண்ணாதுரை, காளி, சண்டகோழி 2, ஆகிய மூன்று படங்களில் பணியாற்றியவர், ஆனால் இவர் சமீபத்தில் ட்விட்டரில் அஜித்திற்காக சில பாடல் வரியை வெளியிட்டார் அதன் மூலம் இவர் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டார்.
“எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிங்கம் எங்க தல” என்ற பாடல்தான் அது இந்த வரியை கேட்டதும் உடனே ரசிகர்களின் நினைவுக்கு வருவது விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல் ஆசிரியர் அருண் பாரதிதான்.
பாடலாசிரியர் அருண் பாரதி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அந்த பேட்டியில் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் அவர் பேசியதாவது” நாம் ஒரு கோவிலுக்கு போனால் எப்படி நமக்குள் பாசிட்டிவ் வைப்ரேஷன் வருகிறதோ அதுபோல்தான் அஜித் சார்” அப்துல்கலாமை பார்த்தாள் எப்படி ஒரு இன்ஸ்பிரேஷன் போல இருக்குமோ அப்படித்தான் அஜித் சார் எனக் கூறியுள்ளார்.
சினிமா திரையுலகில் ஒரு பெரிய ஸ்டார் ஆகிவிட்டால் படப்பிடிப்பில் பந்தாவாக இருப்பார்கள், ஆனால் அஜித் சார் அப்படி கிடையாது, படப்பிடிப்பின்போது அஜித் சார் பின்னால் ஒரு உதவியாளர் கூட இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மிகவும் எளிமையானவர் அனைவரையும் மதிக்க கூடியவர் என அருண் பாரதி கூறினார். அதுமட்டும் இல்லாமல் அஜித்திடம் ஆட்டோகிராப் வாங்கியதையும் வெளியிட்டுள்ளார்.
