பார்ட் 2 ராசியை முறியடிக்குமா டிமான்ட்டி காலனி 2.? அலற வைத்த அமானுஷ்யம், வெளிவந்த முதல் விமர்சனம்

Demonte Colony 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்ட்டி காலனி வெளிவந்தது. ஒரு செயினை திருடி அமானுஷ்ய வளையத்தில் சிக்கும் நண்பர்கள் அநியாயமாக உயிரை விடும் படி அப்படம் இருந்தது.

திகில் கிளப்பும் காட்சிகள், விறுவிறுப்பான கதை என அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

அதே கூட்டணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இருக்கும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

டிமான்ட்டி காலனி 2 முதல் விமர்சனம்

அதே தேதியில் தான் விக்ரமின் தங்கலான் படமும் வெளியாகிறது. அதனாலயே ஒட்டுமொத்த மீடியாக்களும் இப்படத்தை கவனித்து வருகின்றன. அதுமட்டுமின்றி சமீப காலமாக பார்ட் 2 படங்கள் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வருகின்றது.

அண்மையில் வெளிவந்த சந்திரமுகி 2, இந்தியன் 2 போன்ற படங்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. அந்த ராசியை இப்படம் முறியடிக்குமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். அதற்கு முன்பே டிமான்ட்டி காலனி 2 படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

review-demonte colony2
review-demonte colony2

அதன்படி அமெரிக்க விநியோகஸ்தர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதிலும் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கும்.

இந்த இரண்டரை மணி நேரத்தில் நான் ஒருமுறை கூட போனை எடுக்கவில்லை. படம் வெளியான பிறகு இதைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கும் என புகழ்ந்து தள்ளியுள்ளார். ஏற்கனவே திகில் விரும்பிகள் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த விமர்சனமும் பிளஸ் ஆக அமைந்துள்ளது.

நடுங்க வைக்கும் அமானுஷ்யத்தை காட்டும் அருள்நிதி

Next Story

- Advertisement -