Connect with us

Cinemapettai

இடியாப்ப சிக்கலாய், அசத்தல் சஸ்பென்ஸ் திரில்லர் – அருள்நிதியின் K 13 திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

இடியாப்ப சிக்கலாய், அசத்தல் சஸ்பென்ஸ் திரில்லர் – அருள்நிதியின் K 13 திரைவிமர்சனம்.

அருள்நிதி தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தை பிடிக்க சில ஆண்டுகளாகவே போராடி வருகிறார். அதிக பட்ஜெட், குத்தாட்டம், டபிள் மீனிங் காமெடி போன்ற ரூட் எடுக்காமல், வித்யாசமான ஜானர் என குறிவைப்பது இவரின் ஸ்பெஷல். இதனால் தான் என்னவோ இவரின் கே 13 படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

சில படங்கள் கதையை தெரிந்துகொண்டு பார்ப்பதை விட அந்த சஸ்பென்ஸ் அவிழ அவிழ பார்ப்பது தான் சுகம். அவென்ஜர்ஸ் எண்டு கேம் மட்டுமல்ல, இப்படத்தின் ட்விஸ்ட்டையும் சொல்லமால் ரெவியூ பண்ணுவது தான், நாம் அந்த டீமுக்கு கொடுக்கும் மரியாதை.

டோர் நம்பர் K 13, சேரில் கட்டப்பட்ட நிலையில்  ஹீரோ, பின்னால் முறைத்தபடி ஹீரோயின். ஹாரர் திரில்லர் அல்லது சஸ்பென்ஸ் திரில்லர் என்ற எதிர்பார்ப்புடன் தான் நாமும் சென்றோம். படம் இரண்டாம் ரகம்.

கதை – போதையின் காரணத்தால் அனைத்தையும் மறந்து சேரில் இருந்து விடுவிக்க முயற்சிக்கும் ஹீரோ, இறந்து கிடக்கும் ஹீரோயின். முதல் பாதி முழுக்க அருள்நிதி என்ன நடந்தது என யோசிக்க முயன்று அந்த வீட்டை விட்டு தப்பிக்க முயல்கிறார். ஹீரோயினின் ரூம் மேட், எதிர் வீட்டு ஒரு தலை காதலன் என முதல் பாதி முழுக்க முடிச்சுகள் மட்டுமே.

இரண்டாம் பாதியில் பல கேள்விகளுக்கு விடை, சில இடங்களில் சஸ்பென்ஸ் அதிகரிக்க, அது கொலையா அல்லது தற்கொலையா என கொஞ்சம் கொஞ்சமாக புரிகிறது. அட படம் முடிஞ்சதா, என எழ நினைத்த வேலையில் சூப்பர் ட்விஸ்டுடன் முடிகிறது படம். (வாவ்வ்வ் )  சிலருக்கு குழப்பத்தையும், பலரிடம் இருந்து பாராட்டையும் பெறுகின்றது படக்குழு.

சினிமாபேட்டை அலசல் – சினிமா சம்பந்தமான கதையை வைத்து, சினிமா எடுப்பதற்கு என தனி தைரியம் வேண்டும். இயக்குனர் பரத் நீலகண்டன் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு ஸ்பெஷல் பாராட்டு. குறுகிய பட்ஜெட்டில் அசத்தலான திரில்லர் இப்படம். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு, சாம் சி எஸ் இசை, அதனோடு அருள்நிதியின் நடிப்பு தான் படத்துக்கு பிளஸ்.

இன்றைய மல்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸ் தான் இவர்களின் டார்கெட், அவர்களிடம் இருந்து பாராட்டை கட்டாயம் பெரும். துருவங்கள் 16 படத்தை போல், தமிழ் சினிமா ரசிகர்கள் புத்திசாலி தான், நல்ல முயற்சியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்.

சில இடங்களில் “Barton Fink” மற்றும் எஸ் ஜே சூர்யாவின் “இசை” படத்தை நமக்கு நினைவுபடுத்தியது.  எனினும் 1 மணிநேரம் 43 நிமிடத்தில் நம்மை ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு திருப்த்தி படுத்தியுள்ளனர்.

நடிகராக அருள்நிதி சாதித்துவிட்டார் என்ற எண்ணமே நமக்கு படம் முடிந்த பின் தோன்றும். கே 13 – கலக்கல் 3.25 / 5 .

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top