fbpx
Connect with us

ஒரே நாளில் இரண்டு பட அப்டேட்களை வெளியிட்டு மாஸ் காட்டும் அருள்நிதி.. நீங்க வேற லெவல் நண்பா!

arulnithi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே நாளில் இரண்டு பட அப்டேட்களை வெளியிட்டு மாஸ் காட்டும் அருள்நிதி.. நீங்க வேற லெவல் நண்பா!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் படம் வருவதே அரிதாகிவிட்டது. அனைவரும் மசாலா திரைப்படங்களை எதிர்பார்ப்பதால் பலரும் வித்தியாசமான கதைகளை யோசிக்கவே மறந்துவிட்டனர்.

அப்படி யாராவது ஒரு சிலர் யோசித்தால் உடனடியாக அவர்கள் நினைப்புக்கு வரும் ஒரே ஹீரோ என்றால் அது அருள்நிதி மட்டும்தான். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் சினிமாவில் சாதித்தே ஆக வேண்டும் என்ற முற்போக்கு சிந்தனை உடையவர்.

இவர் செலக்ட் பண்ணும் கதைகளில் மற்ற நடிகர்களை யோசித்து கூட பார்க்க முடியாது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர். தனக்கு எது வரும் என்பதிலும் தெளிவு தான். இவர் நடித்த ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்.

ஆரம்பத்தில் வம்சம், உதயம் என கமர்சியல் வட்டத்துக்குள் விழுந்தாலும் அதற்கு பிறகு சுதாரித்துக்கொண்டு மௌனகுரு எனும் படத்தில் தனது நடிப்பால் மிரட்டி காட்டினார். அதன் பிறகு வந்த டிமான்டி காலனி இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இன்று தனது பிறந்த நாளில் அருள்நிதி இருக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். சினிமாவே அவ்வளவுதான் என யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

erumasaani-vijay-arulnithi-movie

erumasaani-vijay-arulnithi

இந்த வகையில் பொல்லாதவன் ஆடுகளம் போன்ற படங்களைத் தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் டைரி என்ற படத்திலும், எரும சாணி புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

dairy-arulnithi

dairy-arulnithi

Continue Reading
To Top