Connect with us
Cinemapettai

Cinemapettai

uthayanithi-arulnithi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உதயநிதி போல் அரசியலுக்கு வருவீர்களா.. அந்தர் பல்டி அடித்த அருந்ததி

தமிழில் ஒரு சில வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அருள் நிதியின் நடிப்பில் தற்போது டி பிளாக் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வரும் அருள்நிதிக்கு இந்த திரைப்படம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அவர் வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் எதிர்காலத்தை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

தற்போது நடிகனாக ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருக்கிறது என்று கூறியுள்ளார். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த அருள்நிதி இப்படி ஒரு பதிலை கூறியது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.

ஆனால் அவரைப் போல்தான் உதயநிதியும் ஆரம்ப காலகட்டத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறினார். தமிழ் திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிக்க வந்த புதிதில் இவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று பலரும் கேட்டனர். ஆனால் அப்போது உதயநிதி அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு கிடையாது. கட்சிக்காக நிறைய பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் நான் கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

ஆனால் அவர் தற்போது கட்சியில் இணைந்து வெற்றி பெற்று ஒரு அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சினிமாவைப் போல் அரசியலிலும் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோன்றுதான் அருள் நிதியும் இப்போது வேண்டுமானால் அரசியல் ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top