fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித், தளபதி விஜய் பற்றி பேட்டியில் அருள் நிதி சொன்ன விஷயம் என்ன தெரியுமா ?

k13

News | செய்திகள்

தல அஜித், தளபதி விஜய் பற்றி பேட்டியில் அருள் நிதி சொன்ன விஷயம் என்ன தெரியுமா ?

அருள் நிதி தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். வித்யாசமான ஜானர் படங்களில் நடிப்பவர். பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள K 13 இந்த வாரம் ரிலீசாகிறது. அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக முன்னணி இணையதளத்திற்கு பேட்டி கொடுத்தார். அதில் விஜய், அஜித் பற்றி இவர் சொன்னது தான் இந்த தொகுப்பு.

விஜய் சார் அவர்களை ஆரம்பத்திலிருந்தே தெரியும். உதய் அண்ணாவுக்கு மிகவும் நெருக்கமானவர். குருவி ஷூட்டிங்கிலும் இரண்டு முறை போல் பார்த்திருக்கிறேன். அது மட்டுமில்லாமல் ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது நண்பர் வீட்டிற்கு வரும் பொழுது சந்தித்திருக்கிறேன். மிகவும் அமைதியானவர்.

அஜித் சார் அவர்களை ஆரம்பம் காலத்தில் சந்தித்ததே இல்லை. சினிமாவில் வந்த பிறகு அவரை பற்றி பலர் சொல்லி ஒரு மனிதராக அவரை பிடித்தது. பிறகு திருமண அழைப்பிதழை கொடுக்க வீட்டிற்கு சென்ற பொழுது, முதல் கேள்வியே திரையில் ஓடி கொண்டிருந்த டிமெண்டி காலனி படத்தை பற்றி தான் கேட்டார். பிறகு வந்த ஜூஸை அவரே வாங்கி பரிமாறினார். சுமார் 1 மணிநேரத்திற்கு பேசினார்.

இவ்வாறு தமிழ் சினிமாவின் இருதுருவங்கள் பற்றியும், தனக்கு அவர்களுடன் நேர்ந்த அனுபவம் பற்றயும் பகிர்ந்தார் அருள்நிதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top