சினேகா

Sneha-3

புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் போற்றப்படும் நடிகை சினேகா தமிழ் திரையில் கால் பதித்து 8 ஆண்டுகள் முடியப்போகிறது. இன்னமும் முன்னணி நடிகை போல பல படங்களை கைவசம் வைத்துள்ளார். எப்படி ஒரு நிருபரின் கையில் கண்டிப்பாக பேப்பர், பேனா இருக்க வேண்டுமோ… அதேப்போல சினிமா நிருபரின் டைரியில் நடிகர்- நடிகைகளில் பயோடேட்டா இருக்க வேண்டும். இனி என் டைரியில் இருந்து சிலபல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அந்த வரிசையில் என்னை மட்டுமல்ல தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கவர்ந்து வைத்துள்ள பு.இ. சினேகாவின் வாழ்க்கை வரலாறை இங்கே தொகுத்து அளிக்கிறேன். சினிமா ரசிகர்கள் எனக்கு தரும் ஊக்கத்தைப் பொருத்து நிருபர் தளம் இன்னும் விரிவடையும்.

பிறந்த நாள் : அக்டாபர் 12

பிறந்த ஊர் : மும்பை

இயற்பெயர் : சுகாசினி

சிறப்பு : புன்னகை

அறிமுக படம் : விரும்புகிறேன்

வாழ்க்கை வரலாறு:

Sneha-Prasanna

சுகாசினி என்ற பெயரையுடைய சினேகா உண்மையிலேயே சினேகமான நடிகை. விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிசாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்புதான் திரையுலகில் நுழைய அடித்தளம் அமைத்து கொடுத்தது. ஆனால் 2001ம் ஆண்டு என்னவளே என்ற படம்தான் சினேகாவுக்கு முதலில் வெளியானது. அந்த ஆண்டிலயே அவர் நடித்த ஆனந்தம் படம் சூப்பர் ஹிட். இதைத்தொடர்ந்து சினேகாவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. ரசிகர்கள் மத்தியில் புன்னகை இளவரசியாக திகழ்ந்த சினேகாவும் காதல் சர்ச்சையில் சிக்கினார். அவரது ஆண் நண்பர் நாக் ரவியுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தியை கண்ணீருடன் மறுத்து வந்த சினேகா தற்போது தொடர்ந்து கலைப்பணி ஆற்றி வருகிறார். 2004ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் சினேகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.