விஜய் ஆண்டனி

Vijay Antony-1

தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முகங்களை கொண்டவர்.

விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார். அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

அதிகம் படித்தவை:  ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா

இவரது அண்மை திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன்.

மேலும் இவர் கன்னடப் படம் பூதிவந்தா – விற்கு இசையமைத்துள்ளார். இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு.

அதிகம் படித்தவை:  மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி

2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த “நாக்க முக்கா” வணிகப்படத்திற்காக பெற்றார்.

தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

Vijay Antony-2

இவர் மேலும் தற்போது நான் மற்றும் சலீம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.