த்ரிஷா

Trisha Krishnan-1

தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரிஷாவின் 12 வருட சினிமா வாழ்க்கை

நடிகை திரிஷா சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிறது.

Trisha Krishnan-2

திரிஷா 1999–ல் சென்னையில் நடந்த அழகி போட்டியில் வென்று ‘மிஸ் மெட்ராஸ்’ ஆக தேர்வானார். அதுவே அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது. அதே ஆண்டில் ‘‘ஜோடி’’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இந்த படத்தில் சிம்ரன்தான் கதாநாயகி. அவருக்கு தோழியாக வந்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். 2002–ல் ‘‘மவுனம் பேசியதே’’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தது. சாமி, லேசா லேசா, அலை, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம், குருவி, மன்மதன் அம்பு, மங்காத்தா என நிறைய படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தியில் காட்டா மீட்டா படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார்.

Trisha Krishnan-3

தற்போது தமிழில் அஜீத் ஜோடியாக என்னை அறிந்தால் ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம் படங்களில் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது. சிறந்த நடிப்புக்காக நிறைய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். கமலஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, அஜீத், விஷால், ஆர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார். 12 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருவது திரிஷாவின் சாதனை இன்னும் சாதிக்க தயாராகிறார். தனது சாதனைகளுக்கு காரணமான திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் திரிஷா நன்றி தெரிவித்து உள்ளார்.