Connect with us
boomerang-movie

விஜய் வெளியிட்ட தன்னுடைய ரசிகர் மன்றக்கொடி

Celebrities | பிரபலங்கள்

விஜய் வெளியிட்ட தன்னுடைய ரசிகர் மன்றக்கொடி

Vijay-Release-his-Flag-Fans

விஜயகாந்தின் வெற்றி, விஜயின் பாதையை லேசாக திருப்பி விட்டிருக்கிறது. விளைவு? கொடி அறிமுக விழா! நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றுதான் விஜய் தெளிவாக அறிவித்து விட்டாரே, பிறகென்ன? விஜயின் எண்ணம் இப்படி இருக்கலாம்.

ஆனால் விஜயின் ரிமோட்டாக செயல்படும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் எண்ணம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது!  தமிழகம் முழுவதும் திரண்டிருந்த விஜய் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் பேச வந்தார் எஸ்.ஏ.சி. ‘அப்பா அப்பா’ என்று ரசிகர்கள் அவரை ஆர்வமுடன் அழைக்க, “என்னை அப்பா என்று அழைத்தீர்களே, அதுவே போதும்” என்று பேச ஆரம்பித்தார் அவர். “நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு ரோடு போட்டுக் கொடுத்தேன். அதில் அவர் வேகமாக ஓட ஆரம்பித்தார். தடுக்கி கீழே விழுந்தாலும் முன்னை விட வேகமாக ஓட வேண்டும் என்ற வெறியோடு ஓடுவார். இந்த வெற்றி ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. விஜயின் உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம். அவருக்கு எப்படி ரோடு போட்டு கொடுத்தேனோ, அதே மாதிரிதான் உங்களுக்கும் ரோடு போட்டு கொடுத்திருக்கிறேன். இப்போது போட்ட விதைக்கு இன்னும் ஐந்து வருடத்திலோ, பத்து வருடத்திலோ நிச்சயமாக பலன் இருக்கும் என்றார் பூடகமாக! புரிந்து கொண்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் அந்த அரங்கத்தையே அதிர வைத்தார்கள்.பின்னாலேயே பேச வந்த விஜய், என்னுடைய ரசிகர்களில் பலர் எல்லா கட்சியிலேயும் இருக்காங்க. நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கவே விரும்புகிறேன். நான் கட்சி ஆரம்பித்தால் அது எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட இழப்பு மாதிரி. ரசிகர்களின் ஆசைக்காக ஒரு கொடி அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவுதான். மீண்டும் சொல்கிறேன். இது என் மன்றக்கொடி மட்டும்தான் என்றார்.

Vijay-Release-his-Flag-Fans-2

விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார். வந்திருந்த அத்தனை ரசிகர்களுக்கும் சுட சுட பிரியாணி ரெடி பண்ணிருந்தார்கள். இத்தனை பேருக்கும் ஒரே இடத்தில் வைத்து பிரியாணி பொட்டலம் கொடுத்தால் அடிதடி வரும். தள்ளுமுள்ளுகளில் ஏதாவது நடந்தால் என்னாகும் என்பதால் பிரியாணி விநியோகத்தை தடுத்து நிறுத்த முயன்றது போலீஸ். கட்டுக்கோப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.ஏ.சி கேட்டுக் கொண்டதை அடுத்து வரிசையில் நின்று பொட்டலம் பெற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top