fbpx
Connect with us

Cinemapettai

5 மொழிகளில் நடித்த ஒரே தென்னிந்திய நடிகை என பெயர் பெற்ற ரம்யா கிருஷ்ணன்

Celebrities | பிரபலங்கள்

5 மொழிகளில் நடித்த ஒரே தென்னிந்திய நடிகை என பெயர் பெற்ற ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

 Ramya Krishnan-Life-2

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் நடித்துள்ள ஒரு தென்னிந்திய நடிகையாவர்.

ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.

Ramya Krishnan-Life-4

30 ஆண்டுகளாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெற்றிப் பெற்ற ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த ஐந்து படவுலகின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பைப் பெற்றிருக்கின்றார்.

தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், மோகன், சுரேஷ், தெலுங்கில் N.T. ராமாராவ், சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், கன்னடத்தில் விஷ்ணூவர்தன், ரவிச்சந்திரன், உபேந்திரா, ஹிந்தியில் அமிதாப் பச்சன், வினோட் குமார், ஷாருக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா என முன்னணி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்து புகழ் பெற்றார்.

Ramya Krishnan-Life-5

80-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே சினிமாவுக்கு வந்த போதும், தமிழ் திரையுலகம் அவரின் திறமையைக் கண்டு கொள்ளவில்லை. மனம் தளராது போரடியவருக்கு தெலுங்கு படவுலகம் கைக்கொடுக்க, அங்கே முன்னணி கதாநாயகி அந்தஸ்தைப் பிடித்தார். 80-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ராதா, பானுப்பிரியா, ராதிகா, சுகாசினி, விஜயசாந்தி ஆகியோருடன் ரம்யா கிருஷ்ணனும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். நவீன நடனம் பரதநாட்டியம் என இரண்டிலுமே சிறந்து விளங்கியது அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளைப் பெற்று தந்ததோடு, அவர் நடித்த படங்களும் வசூல் சாதனைப் படைத்தன.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இவருடன் 80-களில் நடிக்க வந்த நடிகைகள் 80-களின் கடைசியிலும் 90-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் மார்க்கெட் இழந்து, திருமணம் என செட்டிலாகி விட, இளமைக் குன்றாதா ரம்யா மட்டும் தொடர்ந்து கதாநாயகியாக வலம் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். 30 வயதை தாண்டிய பிறகும், இன்றைய இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஒரு பக்கம் கவர்ச்சிக் கதாநாயகியாக வலம் வந்தவர், மறுபக்கம் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களிலும் கலக்கினார். கே.ஆர்.விஜயாவுக்குப் அம்மன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகை என ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே நடிகை. 1986-ஆம் ஆண்டிலேயே அம்மன் வேடமிட்ட ரம்யா, 1995-ஆம் ஆண்டு வெளியான அம்மன் படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார். தொடர்ந்து அவரைத் தேடி அம்மன் பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

Ramya Krishana-6

ஆயினும், தமிழ் ரசிகர்களால் சற்று மறக்கப்பட்டே இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது சூப்பர் ஸ்டாரின் படையப்பா பட வாய்ப்பு. ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் ‘நீலாம்பரியாக’ அவர் வாழ்ந்து காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு கதாநாயகனுக்கு ஈடாக, அதுவும் சூப்பர் ஸ்டார் என்ற இயமத்திற்கு ஈடாக ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு மட்டும் தான் இருக்கும். இனி அப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ரம்யாவின் ‘நீலாம்பரி’ கதாபாத்திரம் வரலாற்றில் இடம் பிடித்தது. எப்படி மூன்றாம் பிறை ஸ்ரீ தேவி மாதிரி நடிக்க ஆசை என பெரும்பாலான நடிகைகள் கூறி வந்தார்களோ, அது போல, ‘நீலாம்பரி’ மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகைகள் இன்னமும் ஆசைக் கொண்டிருக்கின்றனர்.

சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தங்க வேட்டை” நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் கலசம் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து வந்த ‘தங்கம்’ தொடர் அவருக்கு மென் மேலும் புகழைத் தந்தது. தற்போது ‘வம்சம்’ தொடர் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கின்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top