திருவெண்காடு புதன் ஆலயத்தை சுற்றி சின்ன சின்ன கற்களை கட்டி வீடு செய்திருப்பார்கள் பக்தர்கள். இப்படி செய்தால் சீக்கிரம் வீடு கட்டலாம் என்பது ஐதீகமாம்!

Rajinikanth-House Donated-His-FAns

 

இப்படி கனவிலும், பக்தியிலும் நம்பிக்கையை விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திருக்கிற சாமானியர்களுக்கு ரஜினி செய்த காரியம், புதன் பெருமானே செய்த காரியமாக பட்டாலும் ஆச்சர்யமில்லை. தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு சொந்த வீடு கட்டித் தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.

இவரது பண்ணை நிலத்திற்கு பக்கத்திலேயே இப்படி ஒரு பாக்கியம் வாய்த்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் ரஜினியின் அமைதி ஆலயம். ஓய்வு நேரத்தில் இங்கே வந்து விடுவார் அவர். திடீரென்று இந்த நிலத்தை ஒட்டியிருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனது ரசிகர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்.

தனக்காக பல வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குதான் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் அவர். அரை கிரவுண்ட் நிலத்தை தனித்தனியாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் அவர், அங்கு வீடுகளையும் தனது சொந்த செலவிலேயே கட்டிக் கொடுக்கப் திட்டமிட்டுள்ளார்.