ப்ரியதர்ஷனின் படத்தில் நடிக்க சம்பளம வாங்கவில்லை என்று கூறினார் பிரகாஷ்ராஜ்.

Prakash Raj-Priyadarshan-3

விருது வாங்கும் படங்களுக்கு ஒரு சாபக்கேடு. சர்வதேச விருதுகள் கிடைத்தாலும் படம் வெளியிட உள்ளூரில் திரையரங்குகள் மட்டும் கிடைக்காது. இந்த சாபத்தில் சிக்கிக் கொண்ட படம் சேரன் நடிப்பில் டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து. தேசிய விருதுபெற்ற இப்படம் விலை போகாததால் இன்னும் திரையரங்குக்கு வராமல் இருக்கிறது. இதில் நவ்யா நாயர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். படமே இவரை சுற்றிதான பயனிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது இப்படத்தை ஸீ தொலைக்காட்சி வாஙகியுள்ளது.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் தயாரான ‘காஞ்சீவரம்’ படமும் சர்வதேச அளவில் பாராட்டுக்களை குவிந்து வருகிறது. ஆனால் ரசிகர்களின் கவலையெல்லாம் மற்ற படங்களை போல இதுவும் திரையரங்குக்கு வராதோ என்பதுதான்.

Prakash Raj-Priyadarshan

அந்த கவலை விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவர், அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கனடா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இப்படம் இந்தியன் பனோரமாவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் எதுவும் வாங்கவில்லை. லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்தான் நடித்தேன் என்று தெரிவித்தார் பிரகாஷ்ராஜ்