முன்னோட்டமாக நயன்தாரா தனது கவர்ச்சி நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டார். விரைவில் நடிப்புக்கே குட்பை சொல்லப் போகிறார்கள் என்று குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள்.

Prabhudeva-Family

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரபுதேவாவின் கல்யாணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடன் நடனம் ஆடி வந்த ரமலத் என்பவரை காதலித்து வந்த பிரபுதேவா ரகசியமாக அவரை மணந்து கொண்டார்.

அதன் பின்னர் இருவரும் சில காலம் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். பின்னர் குடும்பத்தினருடன் சமரசம் ஏற்பட்டு அனைவரும் இணைந்தனர்.

இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை சில மாதங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்து பிரபுதேவா குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Prabhudeva-Nayanthara-Love Story-1

ஆனால் அந்த சோகத்திலிருந்து விடுபடுவதற்கு முன்பாகவே பிரபுதேவா தனது மனைவிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். அது நயன்தாராவுடன் அவர் கொண்ட திடீர் காதல்.

தன் மீது பெரும் அன்பும், ஆதரவும், காதலும் கொண்டிருந்த பிரபுதேவா இப்படி திடீரென நயன்தாரா மீது காதல் கொண்டது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. தன்னை விட்டு பிரபுதேவா போய் விட மாட்டார் என்ற பெரும் நம்பிக்கையுடன் உள்ளார். கோவில் கோவிலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மறுபக்கம், நயன், பிரபுதேவா காதல் மேலும் மேலும் இறுகியபடி உள்ளதாம். வாழ்ந்தால் பிரபுதேவாவுடன்தான் வாழ்வேன் என்பதில் நயன்தாரா உறுதியாக உள்ளாராம். பிரபுதேவாவும் அப்படியே. அதேசமயம், இருவரும் சேர்ந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்று நயன்தாரா கொடுத்த பார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு நிராகரித்து விட்டாராம் ரமலத்.

இருப்பினும் இதுகுறித்து நயன்தாராவும் சரி, பிரபுதேவாவும் சரி கவலைப்படாமல் உள்ளனராம். சமீபத்தில் நயன்தாராவுக்காக தான் இந்தியில் முதன் முறையாக இயக்கியுள்ள வான்டட் படத்துக்குக் கூட்டிச் சென்று காண்பித்தார்.

Prabhudeva-Nayanthara-Love Story-2

இந்த நிலையில் நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாகவும், விரைவில் பிரபு தேவா – நயன் கல்யாணம் நடக்கப் போவதாகவும் மும்பை மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதை உறுதிப்படுத்துவது போல நயன்தாராவின் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. நயனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் விநாயக். தற்போது ஜூனியர் என்.டி.ஆர்., நயன்தாராவை வைத்து அதுர்ப் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதில் கவர்ச்சிகரமான உடை அணிய வேண்டும் என்று அவர் நயனிடம் கூறியபோது மறுத்து விட்டாராம். இதை விட கவர்ச்சிகரமான டிரஸ் முன்பு போட்டு நடித்தவர்தானே என்று அவர் ஆச்சரியத்துடன் நயனிடம் கேட்டபோது, அது அப்ப, இப்ப இப்படித்தான் என்று கூறி விட்டாராம நயன்.

கவர்ச்சிகரம் வேண்டாமே என்று பிரபு தேவா கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கவர்ச்சிக்கு விடை கொடுத்து விட்டாராம் நயன்தாரா. அப்படியே படிப்படியாக படங்களையும் குறைத்துக் கொள்ளவும், பின்னர் திடுதிடுப்பென கல்யாணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா.

கோடம்பாக்கத்தில் விரைவில் ‘குண்டு’ வெடிக்கலாம்..!

என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்… – நயன்தாரா சவால்!

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன ‘நோக்கத்துக்காக’ இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

Prabhudeva-Nayanthara-Love Story-4

 

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!

ஒரே அறையில் பிரபுதேவா – நயன்தாரா

நடிகர் பிரபுதேவாவும் நடிகை நயன்தாராவும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள்

உலா வந்து கொண்டிருந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் இருவரும் ஒரே காரில் சுற்றுவதும் ஒரே ஓட்டல் அறையில் தங்குவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மும்பையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இருவரும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். விழா முடிந்ததும் அதே காரில் ஒன்றாகவே சென்றனர். அவர்களிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு இதற்கு பதில் சொல்லவில்லை என்று இருவரும் கூறிவிட்டார்கள். ஆனால் நட்சத்திர ஓட்டலில் இருவரும் அறை எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்களாம்.