fbpx
Connect with us

Cinemapettai

NGK பாடலாசிரியர் உமாதேவி. யார் இவர் தெரியுமா ? சவராஸ்யமான தகவல்கள் உள்ளே !

News | செய்திகள்

NGK பாடலாசிரியர் உமாதேவி. யார் இவர் தெரியுமா ? சவராஸ்யமான தகவல்கள் உள்ளே !

NGK

நந்த கோபாலன் குமரன் சூர்யாவின் 36 வது படம். இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் முதல் படம். ‘ யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK

சில தினங்களுக்கு முன் செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ” என்.ஜி.கே ரெக்கார்டிங், மேஸ்ட்ரோ யுவன், அருமையான சித் ஸ்ரீராம் மற்றும் திறமையான உமாதேவியுடன். சூப்பர் காம்பினேஷன்” என கூறி இந்த போட்டோவையும் வெளியிட்டார்.

பாடலாசிரியை தாமரை பற்றி தெரிந்த பலருக்கு உமாதேவி பற்றி அதிக தெரியவில்லை. நம்மை தொணடர்புகொண்டும் சில அன்பர்கள் கேட்டதன் விளைவே இந்த பதிவு.

போயட் உமாதேவி

அத்திப்பாக்கம் கிராமத்தில், வந்தவாசி டாலுக்கில், திருவண்ணாமலை டிஸ்ட்ரிக்ட்டில் பிறந்தவர். பள்ளி படிப்பை தன் ஊரில் முடித்தார் பின் சென்னை வந்து இலக்கியம் பயின்றவர். PhD International Institute of Tamil Studies வரை முடித்தவர். எத்திராஜ் கல்லூரியில் உதவி பேராசிரியர். இன்றைய தேதியில் ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற சில அடைமொழிகளுடன் இணைந்தது தான் இந்த பாடலாசிரியர் பணியும்.

UmaDevi

இவரது பெற்றோர்கள் கூத்து கலைஞர்கள், சகோதரர் கவிஞர்; எனவே இலக்கியம் மேல் ஆர்வம் தானாக வந்துவிட்டது இவருக்கு. தனது ஆசை, வீட்டில் உள்ளவர்களின் உந்துதலோடு செயல்பட்டவர். பல முன்னணி நாளிதழ்களில் இவரின் கவிதை வெளியாகி உள்ளது, இலக்கியத்தில் இவர் ஆர்வம் அதிகம் என்பதால் பல புத்தக வெளியீடு, மேடை பேச்சுக்களில் பங்கேற்றார்.

இலக்கியம் சார்ந்த ஆர்வம் உடைய பா. ரஞ்சித் இவரின் நெருங்கிய நண்பர். அதுவே இவர் சினிமா பாட்டெழுத வாய்ப்பை அமைத்துக்கொடுத்தது. மெட்ராஸ் படத்தின் ” நான் நீ” பாடல் ரஞ்சத்திற்காக இவர் எழுதி கொடுத்த முதல் பாடல். அதுவே இவருக்கு வெற்றியை தேடி கொடுத்தது.

கபாலியின் “மாய நதி”, “வீரம் துறந்தரா”, காலாவின் “கண்ணம்மா” என குறுகிய காலத்தில் 20 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 36 வயதினிலே, அறம், 96 என லிஸ்ட் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

பெண்கள் என்றால் காதல் பாடல்கள் தான் எழுவார்கள் என்ற லாஜிக்கை
“வீரம் துறந்தரா” உடைத்தவர் என்றால் அது மிகையாகாது. அப்பாடலிற்கு நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவலில் விருதையும் பெற்றார்.

UmaDevi

தாமரை, தமிழச்சி தங்கபாண்டியன் வரிசையில் நீங்களும் இடம் பெற வாழ்த்துக்கள் சகோதரி. என்ன தான் நீங்கள் பல பாடல்கள் மென் மேலும் எழுதினாலும் 36 வயதினிலே பட “வாடி திமிரா” மட்டும் அறம் படத்தின் “புது வரலாறே” என்றுமே மறக்க முடியாத ஒன்று தான்.

விரைவில் நீங்கள் தேசிய விருது பெறுவதை பார்க்க ஆவலாக இருக்கும் சினிமாபேட்டை டீம் மற்றும் நண்பர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top