நடிகர் ஏ.கருணாநிதி

Comedy Actor A.Karunanidhi-1

கருணாநிதி ஒரு நல்ல நடிகர். வெறும் நடிப்பு மட்டுமின்றி வேறு திறமைகளும் அவருக்குண்டு. அவர் ஒரு திறமையான புகைப்படக் கலைஞர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நேற்று மிஸ்ஸியம்மா படம் பார்த்தேன். அதில் தங்கவேலுவின் உதவியாளராக வருவார் ஏ.கருணாநிதி. தங்கவேலு சொல்வதையெல்லாம்,குறிப்பெடுக்கும் அவரது பாணி சிரிப்பை வரவழைக்கும். வீரபாண்டியக் கட்டபொம்மனில் ஒரு மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை நடிகரான இவருக்குப் படங்களில் ஜோடியாக நகைச்சுவை நடிகைகளே நடிப்பது வழக்கம்.பெரும்பாலும் டி.பி முத்துலக்ஷ்மி அவர்கள் நடிப்பார். ஆனால் ஒரு படத்தில் தேவிகா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்! அந்தப் படம்”மணமகன் தேவை”

அதிகம் படித்தவை:  டான் சத்யாவாக சாருஹாசன் நடிக்கும் தா தா 87 படத்தின் ட்ரைலர் !

என்னால் மறக்க முடியாத ஒரு படம் இவரும் நாகேஷும் சேர்ந்து கலக்கிய “மெட்ராஸ் டு பாண்டிச்சேரி” இவர் அறுபதுகளில் ஒரு ஓட்டல் நடத்தினார். பெயர் “ஓட்டல் மாமியா”-அசைவ ஒட்டல் மாமியார் வீடு போல் சுவையான சமையல் என்பதால் அப்பெயர். புது விதமான உணவு வகைகள் அங்கு கிடைத்தன. காடை ,கௌதாரி,உள்ளான் இப்படி. ஒரு மறக்க முடியாத நடிகர் ஏ.கருணாநிதி!