fbpx
Connect with us

ரகுவரன் என்ற மாபெரும் நடிகர்

Article / கட்டுரை

ரகுவரன் என்ற மாபெரும் நடிகர்

தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு இடத்தைப்பிடித்த காலத்தால் மறக்கமுடியத கலைஞனான ரகுவரனின் நினைவு நாள் இன்று (19-03-2016) இந்நாளில் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பு..இதோ உங்களுக்காக….

 

Raguvaran-1

 

 

ரகுவரன் வாழ்க்கைக் குறிப்பு:

1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா. ஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது. சத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார். ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.

Raguvaran-2

ரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார். தனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இத்தகைய போதை பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து செல்ல நேர்ந்தது. ரகுவரன் அவரது போதை பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தாலும், அவரால் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர இயலாமல் போனது.

விவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார். தன்னுடைய சுயசரிதை நூல் ஒன்றையும், இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ரகுவரன் ஈடுபட்டிருந்தார்

Raguvaran-6

குடும்பம்: ரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.

 

மறைவு

Raguvaran-5

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார். நடிகை ரோகினியை ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Article / கட்டுரை

Advertisement

Trending

To Top