Connect with us
boomerang-movie

ஒரு வேலை சோற்றுக்கு கூட வழியில்லாமல் இருந்த டிஸ்கோ சாந்தி!!

Entertainment | பொழுதுபோக்கு

ஒரு வேலை சோற்றுக்கு கூட வழியில்லாமல் இருந்த டிஸ்கோ சாந்தி!!

டிஸ்கோ சாந்தி

Ananthan-Disco Shanti-FAther

இவருடைய தந்தை ஆனந்தன், சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர், ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்ற போது பணம் இருந்த காலத்தில் கூடவே இருந்த கூட்டமில்லை, தனியாக நின்றார் கூட இருந்தது பதின்ம வயதிலிருந்த சாந்தியும், குஞ்சும் குளுவானுமாக இருந்த சாந்தியின் தங்கையும் தம்பியும் தான்.

வறுமை கோர தாண்டவமாடியது, அலுவலக வேலைக்குப் போகுமளவிற்கு படிப்புமில்லை, தந்தையால் சம்பாதிக்கும் நிலையுமில்லை, நடிப்புலகிற்கு வந்தார் சாந்தி, தங்க தாம்பாளத்தில் வரவேற்க யாரும் அங்கே தயாராக இல்லை, கிடைத்ததெல்லாம் கவர்ச்சி நடனங்கள் தான், அன்று ஆட ஆரம்பித்தார், தன் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு இறக்கை முளைக்கும் வரை ஆடினார், குலுக்கு நடிகை,தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் அத்தனையும் தாங்கிக்கொண்டு ஆடினார்.

Disco Shanti-Life Story-1

ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை, தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் ‘பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற’ என்ற ஏச்சு தான் விழுந்ததாம், அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?

தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததோ, என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை. இது மாதிரியான கவர்ச்சி நடிகைகள் என்றும் குலுக்கு நடிகைகள் என்றும் நம்மாலும் சமூகத்தாலும் பத்திரிக்கையாலும் விளிக்கப்படும் ஒவ்வொரு நடிகயின் பின்னாலும் ஒரு கையாலாகத தந்தையோ, ஏமாற்றிய காதலனோ, கணவனோ இருந்திருப்பார்கள் அல்லது சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலிருப்பார்கள்.

Disco Shanti-Life Story-3

நடிகைகள் மட்டுமல்ல, எத்தனையோ பெண்கள் அலுவலகங்களிலும், கூலித் தொழிலாளியாகவும், கடைகளிலும் வேலைசெய்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையை எண்ணாமல் தன் தங்கை,தம்பிகளின் வாழ்க்கைக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர், இந்த மாதிரி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை இதே நிலையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று எனக்கு தோன்றுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top