58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு, தென்னிந்திய திரைப்பட உலகுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளதை அறிந்திருப்பீர்கள்.

Indian Cinema-Gives-to-Poet Jayabalan Award

அதில் ஈழக் கவிஞரும்,சிறந்த எழுத்தாளருமான வ.ஐ.ச. ஜெயபாலனுக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது. இவர் ஆடுகளம் படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார்.மொத்தமாக ஆடுகளம் 6 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.அந்த படத்தில் நடித்ததற்காகவே இந்த விருது இவருக்கு கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில்  பிறந்த வ.ஐ.ச. ஜெயபாலன் மிகச் சிறந்த கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இன்னும் சொல்லப் போனால் இலங்கையின் முன்னோடி எழுத்தாளர் என்று சொல்லலாம்.சிறிது காலத்திற்கு முன்பு இந்தியாவிற்கு சென்ற அவர் தொடர்ச்சியாக கவிதைகளும் கட்டுரைகளையும் எழுதி வந்ததை அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் முதன்மை தமிழ் தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் இவரது  நேர் காணல்கள் பலவற்றை பார்த்திருப்பீர்கள்.

இதற்கு முன் நடித்த அனுபவம் உண்டா?

நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். ‘மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். ‘அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார்.

அதிகம் படித்தவை:  தெய்வம் தந்த வீடு சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

Indian Cinema-Gives-to-Poet Jayabalan Award-1

ஜிம்மில் கொண்டுபோய் விட்டு, ‘பேட்டைக்காரன்’ பாத்திரம் எப்படி நடக்கணுமோ அதுபோல நடக்கப் பழக்கினார். ‘பிராக்டிக்கலா விளக்குறதுக்கு முன்னால் நடிப்புன்னா என்னன்னு எனக்கு தியரிட்டிக்கலா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அதுக்கு ஒரு வாரம் வகுப்பு எடுத்தார். உரைநடையில் எழுதுவதை உடல்மொழியில் கொண்டுவர்றதுதான் நடிப்புங் குறது புரிஞ்சுது. அதுக்குப் பிறகு நடிக்கிறது கஷ்டமா இல்லை.

எனக்கு ஒரே இடத்தில் இருந்து பழக்கம் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்காகத் தொடர்ந்து இரண்டு வருடங்கள் ஒரே இடத்தில் இருந்தேன். என் மனைவி வாசுகிதான் எனக்கு ஸ்பான்சர் செய்து தமிழ்நாட்டில் தங்கவைத்தாள். ஊர் ஊராக சுற்றித் திரிந்ததால் நாவலோ, கதைகளோ எழுத முடியவில்லை. கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டு இருந்தேன். இரண்டு வருடங்கள் ஒரே ஊரில் இருந்ததால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிர்கிறது’ என்ற குறுநாவலை எழுதிவிட்டேன்!”

இலங்கையில் சேவல் சண்டை எல்லாம் உண்டா?”

”ஒரு காலத்தில் நடந்ததா கேள்விப்பட்டு இருக்கேன். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு என் சொந்த ஊர். சின்ன வயசில் இருந்து, மனிதர்களுக்கு இடையிலான சண்டைகளைத்தான் நேருக்கு நேரா பார்த்து வளர்ந்தேன்.

அதிகம் படித்தவை:  எம்ப்ராய்டரி செய்பவராக அனுஷ்கா சர்மா நடிக்கும் "சூய் தாகா- மேட் இன் இந்தியா" பட ட்ரைலர் !

”படத்தில் உங்களுக்கு ராதாரவிதான் டப்பிங் பேசி இருக்கார். இருந்தாலும், படப்பிடிப்பில் மதுரை வட்டார வழக்கைப் பேசி நடிப்பது சுலபமாக இருந்ததா?”

”சிங்களப் பெண் பூஜா தமிழ் சினிமாவில் வந்து தமிழ் பேசி நடிக்கும்போது, தமிழனான எனக்கு என்ன மொழிப் பிரச்னை? தவிரவும், ஈழத் தமிழர்களான எங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி வழியாக தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்கும் பல காலமாகப் பழக்கமான ஒன்றுதான். இந்தியத் தமிழர்களுக்குத்தான் ஈழத் தமிழ் விளங்குவது இல்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் புரிந்து கொள்ள முடியும்.

Indian Cinema-Gives-to-Poet Jayabalan Award-2

ஆடுகளத்தில் நான்தான் டப்பிங் பேச விரும்பினேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது. டப்பிங் பேசிய ராதாரவியே, ‘நீங்கள் பேசி இருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும்’ என்று சொன்னார். அவரே ஏற்பாடு செய்து, நடிகர் சங்க உறுப்பினர் அட்டையும் வாங்கித் தந்து இருக்கிறார். என் தாய்நாடான ஈழத்துக்கும் என் கலாசாரத் தாய்நாடான இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இடையிலான முரண்பாடு களைக் களைந்து, ஒற்றுமையான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்!”