சினிமாக்காரர்களுக்கு கோவில் கட்டும் கொடுமையை இன்னும் ரசிகர்கள் கைவிடவில்லை போலும். இப்போது நடிகை அனுஷ்காவுக்கு கோவில் கட்டக் கிளம்பியுள்ளது ஒரு குரூப்.

Anushka-Temple-Her Fans

முன்பு குஷ்புவுக்குக் கோவில் கட்டினார்கள். ஆனால் அவர் தமிழக பெண்களின் கற்பு குறித்து தனது வாய் முத்துக்களை உதிர்த்ததும், அவரது வீட்டுக்கு முன்பு துடைப்பம், செருப்புகளுடன் திரண்டார்கள். பெரும் போராட்டங்களும் வெடித்தது.

பின்னர் சமீபத்தில் நமீதா வுக்கும் கோவில் கட்ட ஒரு குரூப் கிளம்பியது. ஆனால் இப்போது கோவில் கட்டுவார்கள், பின்னர் வேறு மாதிரியாக கவனிப்பார்கள் என்று பயந்த நமீதா, அந்த முயற்சிக்குத் தடை போட்டு விட்டார்.

இந் நிலையில் இப்போது அனுஷ்காவுக்குக் கோவில் கட்ட சென்னையைச் சேர்ந்த சிலர் துடித்து வருகிறார்களாம். தெலுங்கில் முன்னணியில் இருக்கும் அனுஷ்கா இப்போது அருந்ததி படம் மூலம் தமிழில் பிரபலமாகி விட்டார். வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Anushka-Temple-Her Fans-1

அதில் அவரது கவர்ச்சிகரமான ஸ்டில்களைப் பார்த்த சிலர் கோவில் கட்ட கிளம்பியுள்ளனர். இதற்காக சட்டுப்புட்டென்று ஒருசங்கத்தை ஆரம்பித்து, அனுஷ்காவை அணுகி கோவில் கட்ட பெர்மிஷன் கேட்டுள்ளனர்.

ஆனால் அனுஷ்கா அதெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் கோவில் கட்டத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.