காதல் கோட்டை

காதல் கோட்டை – 1996 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரை படம் மாபெரும் வெற்றி பெற்றது.300 நாட்களை கடந்து ஓடியது இந்த திரை படம் மத்திய அரசின் பொழுது போக்கு திரைப்படம் என்ற விருது பெற்றது.

Kadhal Kottai-Ajith-Life-Turning-Movies

இசை :தேவா

தயாரிப்பாளர் : சிவா சக்தி பாண்டியன்

இயக்கம் : அகத்தியன்

 

ஆசை

ஆசை – இது அஜித்தின் நான்காவது படம் இந்த திரை படம் 2oo நாள் வெற்றிகரமாக ஓடியது.அஜித் நடிப்பும் பிரகாஷ்ராஜ் நடிப்பும் மிகவும் நன்றாக இருந்தது. இந்த படத்தின் மூலம் அஜித் என்ற நடிகர் இருப்பது தமிழ் மக்களுக்கு தெரிந்தது.

Aasai-Ajith-Life-Turning-Movies

இசை : தேவா.

தயாரிப்பாளர்: மணிரத்னம்.

இயக்கம்: வசந்த்.

 

வாலி

வாலி – 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் முறையாக இரண்டு வேடத்தில் நடித்தார் அதில் ஒரு அஜித் காது கேட்காதவராகவும் வாய் பேச முடியாதவராக நடித்தார். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை நடிப்பில் அசத்திய திரைப்படம். இது தமிழ் மற்றும் கன்னடத்திலும் வெற்றி பெற்றது இந்த திரைபடம் 200 நாட்களை கடந்து ஓடியது .

அஜித்திற்கு வாலி திரை படம் முதல் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.

Vaali-Ajith-Life-Turning-Movies

இசை: தேவா

தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம் :s.j. சூர்யா

 

அமர்க்களம்

அமர்க்களம் – திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் அஜித்,ஷாலினி ரகுவரன்,நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது 125 நாட்கள் கடந்து ஓடியது. அஜித் மாஸ் அந்தஸ்து பெற்றார். அஜித் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Amarkkalam-Ajith-Life-Turning-Movies

இசை: பரத்வாஜ்

தயாரிப்பாளர்: வெங்கடேஷ்வராலயம்

இயக்கம்: சரண்

 

முகவரி

முகவரி 2000ஆம் ஆண்டு வெளி வந்தது. இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முகவரி திரைப்படம் இவருக்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. முகவரி திரை படத்திற்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் பெற்று தந்தது

Mugavari-Ajith-Life-Turning-Movies

 

இசை: தேவா

தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம் :துரை

 

தீனா

தீனா :திரை படம் 2001 ஆண்டு வெளி வந்தது பெரிய ரசிகர் பட்டாளம் பெற்று தந்தது. இந்த தீனா படத்திற்கு பிறகுதான் அஜீத் “தல” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார் .இந்த திரை படம் 150 நாட்களை கடந்து ஓடியது.

Dheena-Ajith-Life-Turning-Movies

இசை: யுவன்ஷங்கர் ராஜா

தயாரிப்பாளர்: விஜயம் சினி கம்பினேஷ்

இயக்கம் : எ.ஆர்.முருகதாஸ்

 

சிட்டிசன்

சிட்டிசன் திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது, இந்த சிட்டிசனில் முதல் முறை 9 விதமான கெடப்களில் நடித்தார், 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரை படம்.

இந்த திரை படம் 100 நாட்கள் ஓடியது. அஜித்தின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.

Citizen-Ajith-Life-Turning-Movies

இசை :தேவா

தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம் : சரவணா சுப்பையா

 

வில்லன்

வில்லன் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது மீண்டும் இரட்டை வேடத்தில் இவர் நடித்த வில்லன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.100 நாட்களை கடந்து ஓடியது. சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகர் அஜித்

Villan-Ajith-Life-Turning-Movies

 

இசை :வித்தியசாகர்

தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார்

 

வரலாறு

வரலாறு திரை படம் 2006 ஆம் ஆண்டு வெளி வந்தது இதில் மூன்று வேடத்தில் நடித்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டாவது படமான வரலாறு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. அப்பா வேடத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.

Varalaru-Ajith-Life-Turning-Movies

இசை : A.R.ரஹ்மான்

தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி

இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார்

 

பில்லா

பில்லா; திரை படம் 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரை படம் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினி சாயல் இல்லாமல் அஜித் நடித்து இருப்பார் இதில் விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது. வசூல் சாதனை செய்தது.

Billa-Ajith-Turning-Life-Movies

இசை: யுவன்ஷங்கர் ராஜா

தயாரிப்பாளர்: சுரேஸ் பாலாஜி

இயக்கம்: விஷ்ணுவர்தன்