இதுவரை நான் நடித்த படங்களிலேயே ரொம்ப கஷ்டப்பட்டது ராவணனுக்காகத்தான். ஆனால் அந்தப் படத்தின் முடிவு எனக்கு வேதனையாக அமைந்துவிட்டதே, என்று வேதனைப்பட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

Aishwaryarai-Worried About Ravanan Film-1

இதுகுறித்து அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறுகையில்,

“காட்டிலும், மலைகளிலும் ஏறி இறங்கி கஷ்டப்பட்டு நடித்த படம் இது. ஆனால் படம் ஜெயிக்கவில்லை. எனக்கு வேறு எதிலுமே நாட்டம் செல்லவில்லை” என்று கூறியுள்ளார். இந்த தோல்வி தந்த அதிர்ச்சியில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாராம் அவர்.

மேலும், இந்தியில் ராவண் கேரக்டரில் அபிஷேக்பச்சனை நடிக்க வைத்தது தவறு என்றும் விமர்சிக்கப்படுகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராயை கணவன், மனைவியாகவும் ஐஸ்வர்யாவை கடத்திப்போய் காட்டில் வைத்து சித்ரவதை செய்யும் வில்லனாக அபிஷேக் பச்சனையும் நடிக்க வைத்துள்ளனர்.

Aishwaryarai-Worried About Ravanan Film

நிஜ வாழ்வில் கணவன், மனைவியானவர்களை திரையில் வேறு மாதிரி காட்டியது ரசிகர்களை ஈர்க்காமல் போய் விட்டது. இதுவே தோல்விக்கு காரணம், என்றும் கூறுகின்றனர்.