இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். இது தெரியாமல் என்னை ஈழத்தமிழருக்கு எதிரானவனாக சிலர் சித்தரித்துள்ளனர்.

Jiiva-Srilankan-Tamilans-Problem-Twitter-1

ஜீவா தனது டுவிட்டர் இணைய தளத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார். “கோ” படத்தினை பிரபலப்படுத்துவதற்காக நடிகர் ஜீவா சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார்.

அப்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் சார்பில் இரண்டு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதில் ஜீவாவை கையெழுத்திடச் சொன்னதாகவும், அதில் அவர் கையெழுத்திடவில்லை என்றும் சர்ச்சை எழுந்தது. இதை அறிந்து திடுக்கிட்ட ஜீவா, இது குறித்து டுவிட்டர் இணைய தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நாகசைத்தன்யாவின் ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ பட டீசர் 02 !

சேலத்தில் உள்ள முகமறியா பத்திரிகையாளர் ஒருவரால் இந்த வீண் சர்ச்சை எழுந்துள்ளது. சரியான தொடர்பு இல்லாமல் போனதால் இதை சர்ச்சையாக்கியுள்ளனர். நடிகர் சங்கம் சார்பில் இதே ஈழத் தமிழர்களுக்காக கையெழுத்திட்டுள்ளேன். இதை யார் அறிவார். ஆதலால் இதை சர்ச்சையாக்க வேண்டாம்.

அதிகம் படித்தவை:  விஜய்யின் உயிர் நண்பர் சஞ்சீவிக்கு இப்படியொரு பரிதாப நிலையா?

Jiiva-Srilankan-Tamilans-Problem-Twitter-2

“ராமேஸ்வரம்”, “கற்றது தமிழ்” ஆகிய படங்களில் நடித்தற்கு கதை மட்டும் காரணமல்ல, தமிழன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கி இருந்தது தான் முக்கிய காரணம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு குரல் கொடுத்த இளம் வயது நடிகன் நான் தான். நான் என்றுமே தமிழர் பக்கம் தான். முகமறியா அந்த பத்திரிகையாளர் நல்ல ஒரு மருத்துவரை பார்க்க வேண்டுகிறேன். அவர் நலமடையவும் வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.