Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது: முக்கிய வீரர்களுக்கு தொடர்பு?
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர் கான்பூரில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது, இதற்கு அடுத்த நாளான நேற்று இந்த கைது நடவடிகையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சூதாட்டத்தில் முக்கிய வீரர்களுக்கும் தொடர்புள்ளதாக சில மீடியாக்கள் கூறி வருகின்றன.
இதை உறுதி செய்துள்ள கான்பூர் பொலிசார், சில முக்கிய வீரர்களின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன. அவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கப்படும் என கூறியுள்ளனர்
இதனிடையில், கைதான மூன்று சூதாட்டக்காரர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
