சன் செய்தி ஆசிரியர் ராஜா, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அந்த பெண்ணைப் பற்றி அவதூறாக பேசியும் இழிவான தகவல்களை வெளியிட்டும், ராஜா நல்லவர் என்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வேலை செய்துவந்த 8 பெண் செய்தி வாசிப்பாளர்களும் பொய் சாட்சியம் அளித்தனர்.

இது தொடர்பாக சன் நியூஸ் ராஜாவால் பாலியல் துன்பத்திற்கு ஆளான அந்த பெண், தன்னை இழிவாக சித்தரித்த 8 பெண் செய்தி வாசிப்பாளர்கள் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து, விசாரணைக்காக அந்த 8 பெண்களையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் ஆஜராகாததைத் தொடர்ந்து கடைசியாக இன்று காலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த 8 பெண்களும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை.

அதிகம் படித்தவை:  ஆர்.கே நகரில் பட்டைய கெளப்புது 'மதுரை வீரன்' பாடல். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கேப்டன்.

இந்நிலையில் இந்த வழக்கில் சன் நியூசில் வேலை செய்து தற்போது வெவ்வேறு சேனல்களில் வேலை செய்துவரும்

  1. அர்ச்சனா, 2. கிருத்திகா, 3. பானுமதி, 4. காமாட்சி (சத்தியம் டிவி), 5. அருணா (தந்தி டிவி), 6. திவ்யா (நியூஸ் 18) உள்ளிட்ட 8 பேருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதிகம் படித்தவை:  நெட்டிசன்கள் அதிர்ச்சி..! என் உடல் பற்றி தெரிய வேண்டுமா..! ஸ்ருதிஹாசன் அதிரடி..!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக பெண்களே பொய் சாட்சியம் அளிக்கப்போய் இன்று பிடிவாரண்ட் வரை போயிருப்பது பெண்ணியவாதிகளிடையிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.