Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டுடியோ உள்ளே வைரமுத்துவை அனுமதிக்காதீர்கள்.. ஏ.ஆர்.ரஹ்மானின் 22 வருட பகைக்கு என்ன காரணம் தெரியுமா.?

இரண்டு பெரிய ஜாம்பவான்கள் சினிமாவில் இருந்தாலே சலசலப்புக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிகண்ட படங்களில் வைரமுத்துவின் பங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் பாடல் வரிகளை வைரமுத்து செதுக்கி இருப்பார் என்றே கூறலாம். இப்படி வெற்றி கண்ட பிரபலங்கள் தற்போது வரை இரு துருவங்களாக இருந்து வருகின்றன. இவர்கள் இணைந்து வெற்றிகண்ட படங்கள் என்று பார்த்தால் ஜீன்ஸ், படையப்பா, முதல்வன், உயிரே, ஜோடி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ரஹ்மான் மற்றும் வைரமுத்து இடையை பல வருடங்களாக பகை இருந்து தான் வருகின்றது. அதற்கு என்ன முக்கியமான காரணம் என்பதை பிரபல பத்திரிக்கை வெளியிட்டு உள்ளது. 2000 ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து மேடையில் எனது வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ரகுமான் என்பது போன்று பேசி இருந்தாராம்.

இதனால் பெரும் கோபம் அடைந்த ஏஆர் ரஹ்மான் அடுத்த நாளிலிருந்து வைரமுத்துவை தனது ஸ்டூடியோ உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டாராம். இந்த சம்பவம் அறிந்த வைரமுத்து பல நண்பர்கள் மூலம் சமாதானம் பேச தூது அனுப்பி உள்ளார், ஆனால் ரஹ்மான் செவிசாய்க்கவில்லை.

vairamuthu-cinemapettai

vairamuthu-cinemapettai

தற்போது பல சர்ச்சைகளுக்கு பின் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் வைரமுத்து இணைவதாக இருந்தது. ஆனால் அதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன தற்போது படக்குழுவினர் 22 ஆண்டுகால பகையே எப்படியாவது தீர்த்து வைத்து விட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படம் வரும் 2022ஆம் ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு என்று பெரிய நடிகர் பட்டாளமே உள்ளனர்.

Continue Reading
To Top