தன் மனைவி மற்றும் மகள்களின் போட்டோவை பதிவிட்ட ஏ ஆர் ரஹ்மான். 15000 லைக்குகள் பெற்ற போட்டோ

ரஹ்மான்

சில பல வருடங்களாக வெளிநாடுகளில் தான் அதிகம் வசிப்பவர். தற்பொழுது சில ஆண்டுகளாக மீண்டும் நம் இந்தியாவில் மையம் கொண்டுள்ளது இசைப்புயல் என்றால் அது மிகையாகாது.

நம் தமிழிலும் மெர்சல், சர்கார். செக்க சிவந்த வானம் அடுத்ததாக தளபதி 63 , சிவகார்த்திகேயன் படம் என செம்ம பிஸி தான்.

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் “எண்கள் குடும்பத்தின் மிக முக்கியமான பெண்கள் என போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் பல லைக்ஸ் குவித்து வருகின்றது.

இந்த போட்டோவில் அவர் மனைவி சைரா பானு மற்றும் அவர் மகள்கள் கடிஜா மற்றும் ரஹீமா நிதா அம்பானியுடன் உள்ள போட்டோ தான்.

ph

சமீபத்தில் `ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்தின் 10-ம் ஆண்டு விழா மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரின் மகள் கதிஜா ரஹ்மானுடன் உரையாடுவதுபோல் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில் பேசிய அவர் மகள் அப்பாவை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு. இப்பெருமைக்குக் காரணம் அவரோட உலகப் புகழ் இல்ல. அவருக்கு நல்லா வர்ற இசை அல்ல கரணம். அப்பா எங்க மூணு பேருக்கும் சொல்லிக் கொடுத்திருக்க நற்பண்புகளுக்காக அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டு வந்து பத்து வருஷமாச்சு. இன்னும் அப்பா அதே ரஹ்மானாகத்தான் இருக்காரு. அணு அளவும் அவர் மாறல. அப்போ எப்படி இருந்தாரோ அதேமாதிரிதான் இருக்கார்.” என மனம் நெகிழ பேசினார்.

Leave a Comment