vijay-atlee-arrahman

விஜய் நடித்த நான்கு பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு படத்தில் கூட விஜய் பாட வைக்கவில்லையே என்ன காரணம்? அதற்கான காரணம் என்னவென்று ஏ.ஆர்.ரஹ்மான் தான் சொல்ல வேண்டும். ஆனா கடைசியா நடித்த சர்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதற்கு அழைத்ததாகவும் அதற்கு விஜய் மறுத்ததாகவும் விஜய் பாடல் வெளியீட்டு விழாவில் இதனைப்பற்றி கூறியிருப்பார். தான் பாடி அந்த இசையை கெடுத்துவிட வேண்டாம் என்று காமெடியாக கூறினார் விஜய்.

ARRahman_Vijay_Vijay61ஏ.ஆர்.ரஹ்மான் வந்ததற்குப் பின் பாடகர்-பாடகிகள் அப்படி ஏகப்பட்ட பேர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு குரலை தேடுவார். ஒரே குரலைக் கேட்டு கேட்டு மக்களுக்கு அறுத்துவிடக் கூடாது என்பதே அவரின் முக்கியமான நோக்கமாகும்.

அதிகம் படித்தவை:  24 மணி நேரத்தில் சர்கார் Simtaangaran படைத்த சாதனை.!

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். அவர் தமிழ் சினிமாவில் வந்ததற்கு பின்புதான் மற்ற இசைக்கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதுவே ஆஸ்கார் நாயகனின் மிகப்பெரிய சாதனை என்றே கூறலாம்.