Tamil Cinema News | சினிமா செய்திகள்
சொகுசு கார் வாங்கிய ரசிகர். ரஹ்மான் ரெபிரன்சுடன் நம்பர் பிளேட். போட்டோவை பார்த்த இசை புயலின் கமெண்ட் என்ன தெரியுமா ?
ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கென்று உலகெங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
என்ன தான் அவர் நம் இந்திய படங்களுக்கு இசை அமைப்பதை குறைத்து விட்டு இருந்தாலும், அவர் ரசிகர்களுக்கு தன பாடல் வாயிலாக ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் தனியவே இல்லை.
இந்நிலையில் ஒருவர் தன் ட்விட்டரில் ரஹ்மான் அவர்களை டாக் செய்து , நான் உங்களின் பெரிய ரசிகன். எனது கனவு காரை வாங்கினேன் (red BMW ) . எனக்கு உங்களின் பெயர் அதில் இருக்க வேண்டும், என தோன்றியது. ரொம்ப நாட்கள் இந்த தருணத்தை நினைவில் வைத்துக்கொள்வேன்.” என பதிவிட்டார்.
@arrahman I might be your biggest fan ever. Today I bought my dream car and I knew I’d cherish it for a long time. I wanted the car to have my idol’s name on it. Thank you for changing my life with your music. #ARRahman pic.twitter.com/zBC4GW0c3O
— ૐChander (@chanderr) May 17, 2019
இந்நிலையில் இதே பதிவை இன்ஸ்டாகிராமில் பார்த்த ரஹ்மான். வாழ்த்துக்கள், கடவுள் அருள் பாலிக்கட்டும் என பதில் தந்துள்ளார்.

ARR
இதை விட வேற என்ன பாஸ் இருக்கு ஒரு ரசிகனுக்கு மகிழ்ச்சி.
