fbpx
Connect with us

Cinemapettai

‘‘ட்ரம்ப்பின் தலையை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ அர்னால்டு ஆவேசப் பேட்டி

trump-arnold

World | உலகம்

‘‘ட்ரம்ப்பின் தலையை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ அர்னால்டு ஆவேசப் பேட்டி

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ‘செலிப்ரிட்டி அப்ரென்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியை அதிபர் ட்ரம்ப்பைத்தொடர்ந்து, ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னரான அர்னால்டு தொகுத்து வழங்குகிறார்.

இதனால் அர்னால்டு மீது, அதிபர் ட்ரம்ப்புக்கு ஏற்கெனவே இருந்த வெறுப்புக்களும் சேர்ந்து இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், ட்ரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே காரசாரமான கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ‘மென்ஸ் ஜார்னல்’ என்ற பத்திரிகைக்கு அர்னால்டு அளித்த பேட்டியில், ‘ட்ரம்ப்பின் முகத்தை மர டேபிளுக்கு அறிமுகப் படுத்தப்போகிறேன்’ என்று கூறினார். அதாவது ‘‘ட்ரம்ப்பின் முகத்தை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ என்று கூறினார்.

இதனைக்கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப், தனது டுவிட்டர் பதிவில் அர்னால்டை கடுமையாக சாடினார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அர்னால்டு, ‘நாம் அமெரிக்கர்கள், நம்மக்குள் கருத்து வேறுபாடுகள்பாடுகள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என ட்ரம்ப்புக்கு சமாதானக் கொடி காட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top