சென்ற வாரத்தில், கோலிவுட்டில் கமல்-ஷங்கர் இந்தியன் 2 படத்துக்காக இனைவது ஹாட்டாபிக் என்றால், ஹாலிவுட்டில் அர்னால்டு ஸ்வாசனாகர், ஜேம்ஸ் கேமரூன் டெர்மினேட்டர் படத்துக்காக இனைவது தான் வைரல் செய்தி.

டெர்மினேட்டர் கதை:

படத்தின் மையக்க கரு ’Survival Of The Fittest’, என்பது தான். அழியும் நிலையில் உள்ள மனித இனத்திற்கும், சக்திவாய்ந்த ரோபோட்களை வைத்து இருக்கும் ஸ்கைநெட் என்ற சூப்பர் இன்டெலிஜென்ஸ் சம்பந்தமான கம்பெனிக்கும்; இடையில் நடக்கும் தர்மயுத்தம் தான் இப்படத்தின் கதை.

டெர்மினேட்டர் 1 & 2:

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அர்னால்டு ஸ்வாசனாகர், லிண்டா ஹாமில்டன் நடிப்பில் டெர்மினேட்டர்  முதல் பாகம் 1984 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. பின்னர் 1991 ஆம் வருடம் இதன் இரண்டாம் பாகமான ‘ஜுட்ஜ்மென்ட் டே’ படத்தை  தயாரித்து இயக்கினார் ஜேம்ஸ் கேமரூன். இந்த இரண்டு பாகங்களிலும் படத்தின் கதை அமைப்பில் அவரின் பங்கும் உண்டு. இந்த இரண்டு பகுதிகளுமே தாறு மாறு ஹிட் ஆனது.

டெர்மினேட்டர் 3,4 & 5:

அதன் பின் 2003, 2009, 2015 என்று இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது. எல்லா பாகங்களும் ஹிட் தான், அதே சமயம் வசூலிலும் வெற்றி பெற்றது. ஆனால் இதில் ஜேம்ஸ் கேமரூன் அவர்கள் எந்தப் பார்ட்டிலும் சம்பந்தப்படவில்லை என்பதே ஆச்சிர்யமான உண்மையாகும்.

அதிகம் படித்தவை:  உலகம் முழுவதிலும் பாக்ஸ் ஆபிசை தெறிக்கவிடும் பிளாக் பாந்தர் !

டெர்மினேட்டர் 6:

தற்போழுது உருவாகப் போகும் ஆறாம் பாகத்தினை இயக்கப் போவது டெட்-பூல் படத்தின் இயக்குனரான டிம் மில்லர் தான். இப்படத்தின் கதையை அவர் உடன் சேர்ந்து எழுதப்போவது ஜேம்ஸ் கேமரூன் ஆகும். அவர் கூறியது “தற்போழுது வரும் பார்ட், டெர்மினேட்டர் 1 மற்றும் 2வின் தொடர்ச்சி ஆகும். இதற்க்கு முன் வெளிவந்த பாகங்களை கெட்ட கனவாக நினைத்துக்கொள்ளுங்கள்; அல்லது அது வேற டைம்லைனில் நடந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐடியாவை எனக்கு டிம் மில்லர் தான் கொடுத்தார். மேலும் படம் தற்பொழுது நிகழ் காலத்தில் நடப்பது போலவே இருக்கும்.” என்றார்.

மீண்டும் சாரா கோன்னர்ஸ் ஆக லின்டா ஹாமில்டன்:

25  வருடங்களுக்கு பின் மீண்டும் டெர்மினேட்டர் படத்தில் நடிக்கிறார் லின்டா(தற்பொழுது 61 வயது). இதனை ஜேம்ஸ் கேமரூன் அவர்களே உறுதி செய்தார்.” ஆண்கள் 50 , 60 வயதில் ஆக்ஷன் படங்களில் நடிக்கிறார்கள், அதே போல் பெண்களுக்கு ஒரு உதாரணம் சொல்லும் விதமாக, அவரின் ரோல் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்படத்தில் ஹீரோயின் அவர் இல்லை. 18  வயதுடைய பெண் ஒருவர் தான் இப்படத்தின் கதை நகர காரணமாக இருப்பார். இறந்த காலம் மற்றும் எதிர் காலம் இரண்டில் இருந்தும் காரக்டர்கள் வந்து போவது போல் தான் கதையை எழுதி உள்ளேன்.”

அதிகம் படித்தவை:  யுவனின் இசையில் வெளியானது பியார் பிரேமா காதல் படத்தின் 12 பாடல்கள் !

டேக்கன் படப்புகழ் லியாம் நீசன்.

“எனக்கு  65 வயதை கடந்து விட்டது, இதற்கு மேலும் நான் ஆக்ஷன் படங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போர் அடித்து விடும், எனவே இனிமேல் ட்ராமா படங்களில் கவனம் செலுத்தி நடிப்பேன்.” என்று முன்பு ஒரு பேட்டியில் கூறிய லியாம் நீசன் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம்.

அர்னோல்ட் 70,  லின்டா 61,  மற்றும் நீசன் 65 வயது . இவர்களை வைத்து ஜேம்ஸ் கேமரூன் கதையை எப்படி கொண்டு செல்வார் என்று டெர்மினேட்டர் படத்தின் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். எது எப்படியோ 2019ல் மீண்டும் வரப்போகிறது டெர்மினேட்டர் .