ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அர்னாவ்-வை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய போட்டியாளர்கள்.. வீட்டை விட்டு போகும் போது கூட வச்சு செய்த விஜய் சேதுபதி

Bigg boss Vijay sethupathi: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது கொஞ்சம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் சில போட்டியாளர்களின் உண்மையான முகம் தெரியவராமல் முகமூடி போட்டிருக்கிறார்கள்.

அதிலும் உண்மையான குணத்தை காட்டாமல் நடித்துக் கொண்டிருக்கும் அர்னவ் ரொம்பவே நடிக்கிறார், எதார்த்தமாக இல்லை, மக்களிடம் நல்ல பேரை சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு நல்லவர் போல் ஆக்டிங் கொடுக்கிறார் என்று பல விதமான கருத்துக்கள் போய்க் கொண்டிருக்கிறது. இது வெளியில் இருந்து மட்டும் கிடைக்கவில்லை உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் அர்னாவ்-வை பற்றி இந்த கருத்துக்களை தான் வைக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது அர்னாவ் தான். ஆனால் இது தெரியாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அர்னாவ்-வை ஒட்டுமொத்தமாக ஒதுக்கும் அளவிற்கு மொத்த வன்மத்தையும் காட்டுகிறார்கள். அதாவது செப்ரி, சத்தியா, முத்துக்குமார் மற்றும் தீபக் அனைவரும் சேர்ந்து டம்மி பீஸ், குரூப்ல டூப்பு, டிராமா சீன் இதையெல்லாம் அர்னாவ்க்கு கொடுக்கிறார்கள்.

இதைப் பற்றி விஜய் சேதுபதி, அர்னாவிடம் கேட்டதற்கு வழக்கம் போல் இதெல்லாம் எனக்கு பெருமையாக இருக்குது என்று ஓவராக சொன்னார். இதை கேட்டதும் விஜய் சேதுபதிக்கு கோபம் அதிகரித்து விட்டது. உடனே இதுல என்ன பெருமையா நீங்க பாக்குறீங்க. உங்களுக்கு சந்தர்ப்பம் நன்றாக கிடைத்து இருக்கிறது அதை நீங்கள் ஏன் சரியாக பயன்படுத்தவில்லை என்று நான் கேட்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது கூட நீங்கள் உங்களுடைய உண்மையான குணத்தை காட்டாமல் அவர்கள் ஒவ்வொருவரும் கொடுத்த விருதுக்கு பெருமையாக இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்கள் உண்மையாகவே எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீங்க என்று தாறுமாறான கேள்வியை கேட்டு வீட்டை விட்டு வெளியேறும் அந்த தருணத்தில் கூட விஜய் சேதுபதி நல்லா வச்சு செஞ்சு விட்டார்.

ஆனால் பொதுவாக எந்தப் போட்டியாளர்களுக்கும் இந்த அளவிற்கு மக்களிடம் ஒரு வெறுப்பு கிடைத்ததில்லை. ஆனால் அர்னாவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு வாரத்திலேயே இப்படி ஒரு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார் என்றால் அதற்கு அவர் வெளியே செய்த லீலைகளுக்கு கிடைத்த தண்டனையாக தான் இருக்கிறது. இதுதான் முன்வினை செஞ்ச பாவம் தொடரும் என்று சொல்வார்கள்.

- Advertisement -

Trending News