Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

ஜாம்பிகளுக்கு நடுவே அட்டகாசமான புதையல் வேட்டை.. Army Of The Dead விமர்சனம்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஜாக் ஸ்னைடர் இயக்கி, ஒளிப்பதிவு செய்து நெட் பிலிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியான படமே ‘ஆர்மி ஆஃப் தி டெட்’. 300 பருத்தி வீரர்கள், பேட்மேன் vs சூப்பர்மேன், டான் ஆஃப் ஜஸ்டிஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் இம்முறை ஜாம்பி என்ற ஜானர் உடன் டீமாக சென்று கொள்ளையடிப்பது என்ற ஜானரயும் மிக்ஸ் செய்துள்ளார்.

கதை – அமெரிக்க மிலிட்டரி அதீத திறன் உடன் மாற்றி உருவாக்கப்பட்ட ஜாம்பி ஒருவனை இடம் மாற்றுகின்றனர். விபத்து ஏற்பட, அவன் அங்கிருந்து வெளியே வந்து அடுத்தவர்களை தாக்குகிறான். அமெரிக்க லாஸ் வேகஸ் நகரமே ஜாம்பிகளாக மாறிவிடுகிறது. மிலிட்டரி மற்றும் மக்களின் உதவியால் பலரை மீட்கின்றனர். கப்பலில் செல்லும் கண்டெய்னர் உதவிகொண்டு தடுப்பு  அமைத்து ஜாம்பிகளை அதனுள் அடக்குகின்றனர். ஒருபுறம் குவாரன்டைன் பகுதி, மறுபுறம் மக்களின் அவலங்கள் என்று செல்ல, அணு ஆயுதம் கொண்டு அந்த ஜாம்பிகளை அழிக்க அரசு முடிவு செய்கிறது.

அந்த நேரத்தில் தான் ஒருவன் நம் ஹீரோ படிஸ்டாவிடம் ஒரு டீல் கொடுக்கிறான்.  டீம் ரெடி செய்து உள்ளே செல், அங்குள்ள சூதாட்ட க்ளப் லாக்கரில் 200 மில்லியன் டாலர் உள்ளது. அதை கொண்டு வா, உனக்கும் உனது டீமுக்கும் 50 மில்லியன் என்கிறான். நம் ஹீரோ டீம்மை   ஹெலிகாப்டர் ஓட்ட ஒருவர், லாக்கர் திறக்க ஒருவன், உள்ளே கூட்டி சென்று வழிகாட்ட ஒருத்தி, ஜாம்பிகளை வேட்டையாட சிலர் என கூட்டணி போடுகிறார். கூடவே வில்லனின் ஆளும் வருகிறான். எதிர்ப்பாராத விதமாக ஹீரோவின் மகளும் இணைகிறாள்.

உள்ளே சென்றதும் ஒரிஜினல் ஜாம்பி கடித்தவர்கள் திறன் வாய்ந்தவர்களாக (ஆல்பா ஜாம்பி) இருப்பதை அறிகின்றனர். ஜாம்பி அரசன், அவனுக்கு ஒரு ராணி, ஜாம்பி புலி என வேற லெவெலில் உள்ளது அங்கு. வில்லனின் நோக்கம் அந்த ஆல்பா ஜாம்பி ரத்தம் அல்லது உடலை எடுப்பது தான். பணம் இங்கு டீம்மை ஏமாற்றும் முயற்சி தான்.

army of the dead 1

பணத்தை எடுக்கும் முயற்சியிலும், பின்பும் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். இறுதியில் ஹீரோ தான் மகளை மட்டும் காப்பாற்றி விடுகிறார். ஜாம்பியால் கடிக்கப்பட்ட ஒருவன் மெக்சிகோ எல்லையை அடைவதுடன் முடிகிறது படம்.

சினிமாபேட்டை அலசல் – படத்தின் ஓடும் நேரம் 2 மணி நேரம் 28 நிமிஷம் என்பது பெரிய மைனஸ். ஹீரோவுக்கும் அவர் மகளுக்குமான எமோஷனல் கோணம் நன்றாக இருப்பினும், மற்ற டீம் நபர்களுடன் நமக்கு பெரிய உடன்பாடு வரவில்லை. அவர்கள் இறக்கும் சமயத்தில் கூட பெரிதாக பாதிப்பில்லை.

டெக்கினிக்கல் விஷயம் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய ப்ளஸ். ஜாம்பிகளுக்குள் உள்ள கட்டமைப்பு,  அவர்கள் ராஜ்ஜியம் என்பதெல்லாம் ஜாம்பி படங்களுக்கு புது தான்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஜாம்பி என்ற ஜானரை எடுத்து அதனை அவதார்/ பிளானட் ஆப் தி ஏபேஸ் போன்ற டெம்ப்லேட்டுக்குள் புகுத்திவிட்டார் இயக்குனர். இப்படம் அந்த காலகட்டத்தில் அதாவது 2007 இல் ரிலீஸ் ஆகியிருந்தால் கட்டாயம் பம்பர் ஹிட் , ஆனால் இன்று ஏனோ ஒரு நெருடலுடன் தான் உள்ளது.

ஜாக் ஸ்னைடரின் பிரம்மாண்ட படங்கள் திரை அரங்கில் பார்த்தால் தான் திருப்த்தி தரும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்படம் இந்த லாக் டவுனில் வீட்டில் அமர்ந்தபடி பொழுதை கழிக்க சிறந்தது தான். அதிக எதிர்பார்ப்புகள் இன்றி பார்த்தால் கட்டாயம் போர் அடிக்காமல் செல்லும்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5

Continue Reading
To Top