நாம் இன்று இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்குகிறோம் என்றால் நம் ராணுவர்கள் கொல்லும் குளிரில் இரவு, பகலாக நமது தேசத்தை காவல் காப்பதால் தான்.

மாண்புமிகு உறுப்பினர்களே.. தயவு செய்து நமது தேசத்தை அசிங்கப் படுத்தாதீர்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது தான் நமது ராணுவ வீரர்களை கேவலமாகப் பேசுவதும்..!

கீழே படியுங்கள் நண்பர்களே..ஒருமாண்புமிகு பேசிய பேச்சை..!?

மும்பை: ”ராணுவ வீரர்களின் மனைவியர் நடத்தை கெட்டவர்கள்” என்ற பாஜ ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.யின் (சட்டமேலவை உறுப்பினர்) பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அனைத்து கட்சியினரும் இதற்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ. ஆக இருப்பவர் பிரஷாந்த் பரிச்சரக். சுயேட்சையான இவர் பாஜ ஆதரவை பெற்றவர்.

பரிச்சரக் 2016ம் ஆண்டு சோலாப்பூர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாக சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுயேட்சையாக போட்டியிட்ட இவர் பாஜ ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் பரிச்சரக் பேசுகையில், ”இந்திய அரசியல், ராணுவ வீரர்களின் மனைவியரை போன்றது. ராணுவ மனைவியர் கணவனுக்கு உண்மையானவர்கள் அல்லர்.

கணவன்மார் எல்லையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்களது மனைவியரோ கர்ப்பமாகி பிள்ளையை பெறுகிறார்கள்.

கணவன் இல்லாமலேயே குழந்தையை பெறுகிறார்கள். கணவன் எல்லையில். மனைவி கையில் குழந்தை” என்று கேவலமாக பரிச்சரக் பேசியுள்ளார்.

இதற்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.